செய்திகள்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-07-10 12:41 IST   |   Update On 2018-07-10 12:41:00 IST
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவு என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #NEET #Sengottaiyan
திருச்சி:

திருச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பள்ளி கல்வித்துறை இந்தியாவிலேயே முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்கள் இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை பின்பற்றுகின்றன.

பள்ளியில் படிக்கும் போதே மாணவ-மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் திறன்மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 12 பாடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.) பாடத்துக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அதிக அளவு பயன் பெறுவார்கள்.

இந்தியா முழுவதும் 80 லட்சம் என்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். தமிழகத்தில் 1.6 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்துவதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெற உதவியாக இருக்கும்.


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். அதுவே தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் நீட் தேர்வுக்கான பயிற்சி மாணவர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படும். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு வசதியாக 422 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #NEET #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News