செய்திகள்

ஜி.எஸ்.டி. வரியால் தொழில் முடக்கம்- வருவாய் இழப்பு: தினகரன் பேட்டி

Published On 2018-07-01 14:07 GMT   |   Update On 2018-07-01 14:07 GMT
ஜி.எஸ்.டி.யால் தொழில் முடக்கம், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #dinakaran #gst

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி இல்லதிருமண விழா நடைபெற்றது. இதில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:- 

அம்மாவின் இணைபிரியாத தோழி சின்னம்மா. அம்மா உயிரோடு இருந்திருந்தால் அவர் இந்த திருமணத்தை நடத்தி வைத்திருப்பார். சின்னம்மா இருந்தாலும் நடத்தி வைத்திருப்பார். சின்னம்மா கலந்து கொள்ள முடியாத நிலையில் நான் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளேன் என்று கூறினார். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை அபகரித்து கொண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் உல்லாசமாக இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளாரே. உங்கள் கருத்து? 


பதில்:- திண்டுக்கல் சீனிவாசனை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். 18 எம்.எல்.ஏ., வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சட்டமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடைபெறும். அப்போது இந்த ஆட்சி கலைந்து விடும்.

நாங்கள் ஆட்சியை பிடிப்போம். அப்போது அம்மா வழியில் ஆட்சி நடைபெறும். சேலம்- சென்னை 8 வழிச்சாலையால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி.யால் தொழில் முடக்கம், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். #dinakaran #gst

Tags:    

Similar News