செய்திகள்

என் மீது வழக்கு போட்டு தமிழக அரசு மிரட்டி பார்க்கிறது - தங்க தமிழ்செல்வன் ஆவேசம்

Published On 2018-07-01 05:43 GMT   |   Update On 2018-07-01 05:43 GMT
என் மீது வழக்கு போட்டு தமிழக அரசு மிரட்டி பார்க்கிறது என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.#Thangatamilselvan

தேனி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசியதாவது:-

எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து பேசியதற்காக என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது செல்லமேஸ்வர் உள்பட சக நீதிபதிகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அவர்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரப்படவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 6 மாதம் அவகாசம் கொடுத்தும் மத்திய அரசு அமைக்கவில்லை. ஆனால் அதற்கு ஏன் அவமதிப்பு வழக்கு தொடரவில்லை.


உள்ளாட்சி, கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய போதும் தமிழக அரசு எதையும் செய்யவில்லை. அப்போது தமிழக அரசு மீது ஏன் வழக்க தொடரவில்லை.

ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் எம்.எல்.ஏ. இல்லாமல் அவதிப்படும் ஆதங்கத்தில் பேசியதை அவமதிப்பு என்கின்றனர்.

தமிழக அரசு என் மீது வழக்கு போட்டு மிரட்டி பார்க்கிறது. என்னை கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னை- சேலம் 8 வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்களை அழிப்பது தேவையற்றது. சென்னை கன்னியாகுமரி சாலையை 8 வழிச்சாலையாக அமைக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார். #Thangatamilselvan

Tags:    

Similar News