செய்திகள்

சூப்பர் முதல்வராக கவர்னர் செயல்படுகிறார்: வேல்முருகன் தாக்கு

Published On 2018-06-29 10:46 GMT   |   Update On 2018-06-29 10:46 GMT
மோடி அரசின் சூப்பர் முதல்வராக தமிழக கவர்னர் ஆட்சி செய்கிறார் என்று வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். #velmurugan #tngovernor #tnchiefminister

நாகர்கோவில்:

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கில் ஜாமீன் பெற்று நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். இன்று 5-வது நாளாக அவர் கையெழுத்து போட்டார். அப்போது அவரை வெளிமாவட்ட கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

அதன்பின் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேர்தல் ரீதியாக மக்களை சந்திப்பதற்கு தமிழக அரசு பயப்படுகிறது. இந்த ஆட்சியில் மீனவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் விரோத ஆட்சியாக தற்போதுள்ள ஆட்சி நடைபெறுகிறது.

மோடி அரசின் சூப்பர் முதல்வராக தமிழக கவர்னர் ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காது. சட்டசபைக்கு தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். தேர்தல் வந்தால் எந்த சாதனையை கூறி அவர்களால் ஓட்டு கேட்க முடியும்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, டெல்டா விவசாயிகள் தற்கொலை, ஒகி புயலால் மீனவர்கள், விவசாயிகள் பாதிப்புபோன்றவற்றை அவர்களால் சாதனைகளாக சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த லாபமும் இல்லை. பெரும் பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தான் லாபம் அடைந்துள்ளன.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு துரோகம் செய்து விட்டது. இதன் காரணமாக ஏ.டி.எம்.களில் காத்து கிடந்த பலர் உயிரை விட்டனர்.

தமிழகத்தில் சொந்த நாட்டிலேயே மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எங்கும் மக்களின் அழுகுரல், கூக்குரல் தான் கேட்கிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி 150 அமைப்புகளை ஒருங்கிணைந்து செயல்படுகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #velmurugan #tngovernor #tnchiefminister

Tags:    

Similar News