செய்திகள்

சட்டசபையில் இருக்கும் அனைவருமே நடிகர்கள் - துரைமுருகன்

Published On 2018-06-27 14:12 IST   |   Update On 2018-06-27 14:12:00 IST
சட்டசபையில் இருக்கும் அனைவருமே நடிகர்கள் என்று தி.மு.க.வின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார். #TNAssembly #Duraimurugan

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்துவது பற்றிய கேள்விக்கு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பதில் சொல்லிக் கொண் டிருந்தார்.

அப்போது 1 லட்சம் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன் நாடகக் கலையை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரதாஸ் சுவாமிகள், ‘‘அருணாச்சல கவிராயர் ஆகியோர் எழுதிய வரிகளிலேயே அந்த நாடகங்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.

துரைமுருகன்:- நான் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். இப்போது இந்த சபையில் இருக்கும் எல்லோரும் ஒவ்வொரு வகையில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோருமே நடிகர்கள் தான்.

(அப்போது சபையில் சிரிப்பலை எழுந்தது).

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- 2001- 2006-ம் ஆண்டு ஆட்சியின் போது துரைமுருகனை பார்த்து அன்றைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ‘நீங்கள் சிறப்பாக நடிக்கிறீர்கள். நவரச நடிப்பும் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் நடிகராகி இருந்தால் உலக நடிகர் ஆகி இருக்கலாம்’ என்று சொன்னார். அந்த வார்த்தைதான் இப்போது என் நினைவுக்கு வருகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly #Duraimurugan

Tags:    

Similar News