செய்திகள்

பா.ஜ.க.வின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது - தமிழிசை பேட்டி

Published On 2018-06-23 12:12 IST   |   Update On 2018-06-23 12:12:00 IST
பா.ஜ.க.வின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #TamilNaduBJP
சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க.வின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது. காவிரி விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை என சொல்லும் குமாரசாமி கண்டிக்கப்பட வேண்டியவர். அவருக்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பை காட்டவில்லை.

தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். திமுக ஆட்சியில் கொண்டு வர முடியாத எய்ம்ஸ் மருத்துவமனையை பா.ஜ.க. ஆட்சிதான் கொண்டு வந்துள்ளது. நாமக்கல்லில் மக்கள் நலனுக்காக தான் கவர்னர் ஆய்வு மேற்கொண்டார். ஆனால் திமுக.வினர் கருப்புக் கொடி காட்டினர். திமுக உண்மையாக அரசியல் செய்தால் கர்நாடகாவை நோக்கி தான் நடைபயணம் செய்ய வேண்டும். இதன்மூலம் நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை.

இவ்வாறு  தமிழிசை கூறினார்.



கமல்ஹாசனின் புதிய கட்சி அங்கீகாரம் குறித்து கேட்டபோது, ‘தேர்தல் கமிஷன் யார் சென்று விண்ணப்பித்தாலும் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும். தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை பெற்றாலும், மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும்’ என்றார் தமிழிசை சவுந்தரராஜன். #TamilisaiSoundararajan #TamilNaduBJP
Tags:    

Similar News