செய்திகள்

மோடி ஆட்சி தொழிலாளர்களுக்கு விரோதமாக நடக்கிறது- ஜி.ராமகிருஷ்ணன்

Published On 2018-05-01 06:10 GMT   |   Update On 2018-05-01 06:10 GMT
மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கும், தொழிலாளர்ளுக்கும் விரோதமாக ஆட்சி நடத்தி வருகிறது என்று ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #CPM #GRamakrishnan #Modi
திருப்பூர்:

மே தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிரு‌ஷணன் திருப்பூர் கூட்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கும், தொழிலாளர்ளுக்கும் விரோதமாக ஆட்சி நடத்தி வருகிறது. நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் விருப்பப்படி தொழிலாளர்களை காரணமின்றி பணி நீக்க மோடி அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டம் எதுவும் இல்லை. மத்திய அரசு தொழிலாளர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும்.

காஷ்மீர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது உலக அரங்கில் பேசப்பட்டது. ஆனால் காஷ்மீர் துணை முதல்- மந்திரி இது ஒரு சாதாரண சம்பவம் தான் என்று கூறி சமாதானம் செய்கிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

திருப்பூரில் கூட்டுறவு சங்கத்தேர்தல் ஜனநாயகப்படி நேர்மையாக நடத்த வேண்டும். நேர்மையாக நடைபெறாத பட்சத்தில் தட்டிக்கேட்ட கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #CPM #GRamakrishnan #Modi
Tags:    

Similar News