செய்திகள்
பூலித்தேவன் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி

அ.தி.மு.க. பொதுக்குழு வெற்றிகரமாக நடந்து முடியும்: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Published On 2017-09-01 12:49 IST   |   Update On 2017-09-01 12:49:00 IST
அ.தி.மு.க. சார்பில் வருகிற 12-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடியும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சிவகிரி:

விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவனின் 302-வது பிறந்தநாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அடுத்த நெற்கட்டும் செவலில் அவரது அரண்மனை வளாகத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பூலித்தேவனின் குலதெய்வ கோவிலான உள்ளமுடையார் கோவிலில் இருந்து இன்று காலை பூலித்தேவனின் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி தலைமையில் பால்குட ஊர்வலம் எடுத்துவரப்பட்டு பூலித்தேவனின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூலித்தேவன் சிலைக்கு கோமதி முத்துராணி துரைச்சி மாலை அணிவித்தார். தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதியம் சுமார் 11.45 மணிக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அங்குள்ள அரண்மனையை சுற்றிபார்த்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘அ.தி.மு.க. சார்பில் வருகிற 12-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடியும்’ என்று கூறினார்.

அப்போது அவருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, பாஸ்கரன், முன்னாள் அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், கண்ணப்பன், முனுசாமி, மற்றும் மனோஜ்பாண்டியன், மனோகரன் எம்.எல்.ஏ., ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பூலித்தேவன் பிறந்தநாள் விழாவை யொட்டி நெல்லை- தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நெற்கட்டும் செவல் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், ஏ.டி.எஸ்.பி. மாதவநாயர் தலைமையில் 10 டி.எஸ்.பி.க்கள், 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Similar News