செய்திகள்
கொறடா நோட்டீசுக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் பதில்
வெளியில் நடக்கும் சம்பவங்களை உங்கள் உத்தரவு கட்டுப்படுத்தாது என கொறடா நோட்டீசுக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளித்துள்ளனர்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாகவும், அவரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கவர்னர் வித்யாசாகர்ராவிடம் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் மனு கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து அந்த 19 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் தனபாலிடம் அரசு கொறடா ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகார் கடிதத்தை 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பினார்.
இந்த நோட்டீசுக்கு தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், ஏழுமலை ஆகியோர் பதில் கடிதம் தயாரித்து சட்டசபை செயலாளர் பூபதியை சந்தித்து கொடுத்தனர். இவர்கள் 3 பேர் தவிர மற்ற 16 எம்.எல்.ஏ.க்களுக்கான பதில் மனுவை அவர்கள் தரப்பு வக்கீல்கள் கொடுத்தனர்.
விளக்க கடிதம் பற்றி தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
அரசு கொறடா பிறப்பிக்கும் எந்த உத்தரவும் சட்டசபைக்குள்தான் பொருந்தும், வெளியில் நடைபெறும் சம்பவங்களை அவரது உத்தரவு கட்டுப்படுத்தாது.
நாங்கள் 19 பேரும் கவர்னரை சந்தித்து முதல்- அமைச்சரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குற்றம் என்று கூறி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து எங்களை நீக்கப் போவதாக சபாநாயகர் அனுப்பிய நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.
கவர்னரை நாங்கள் சந்தித்தது குற்றமாகாது என்று நாங்கள் சபாநாயகருக்கு பதில் அனுப்பி உள்ளோம்.
ஒரு ஜனநாயக நாட்டில் யாரையும் குறை கூற உரிமை உண்டு. அந்த வகையில் முதல்-அமைச்சரை பற்றி குறை கூறியதாக தெரிவித்துள்ளோம்.
பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுப்பதையும் குறை கூறி இருந்தனர். அதுவும் தவறில்லை என்று விளக்கி கூறி உள்ளோம்.
அரசு கொறடா இதுவரை எந்த உத்தரவும் எங்களுக்கு பிறப்பிக்காத நிலையில், உத்தரவை மீறி விட்டதாக எப்படி எடுத்து கொள்ள முடியும் என்று நாங்கள் வினா எழுப்பி உள்ளோம்.
எங்கள் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்கும் அதே சமயத்தில் சட்டசபையில் கொறடா உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் தி.மு.க.வுடன் சேர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்த்து ஓட்டு போட்டார்களே? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேட்டுள்ளோம்.
எனவே கொறடா உத்தரவை ஏற்று சபாநாயகர் எங்களை பதவி நீக்கம் செய்ய எந்த அதிகாரமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.