செய்திகள்
வருமானவரித்துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம்: திருநாவுக்கரசர்
தேர்தலை முன்னிட்டு சிலர் வீடுகளில் மட்டும் வருமான வரித்துறை சோதனை நடந்திருப்பது அரசியல் உள்நோக்கம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரை சார்ந்தவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு சிலர் வீடுகளில் மட்டும் வருமான வரித்துறை சோதனை நடந்திருப்பதால் மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஓ. பி.எஸ் அணியினர் சவப்பெட்டியை வைத்து பிரசாரம் செய்தது அநாகரீகமானது.
மத்திய பா.ஜனதா அரசு ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் அரசியல் செய்து காலூன்ற முயல்கிறது. அ.தி.மு.க 2 ஆக உடைந்திருக்கும் இந்த நிலையில் பா.ஜனதா தனக்கு சாதகமான ஒரு அணியை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தல், துணைஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தலில் சந்திக்க வசதி ஏற்படுத்திக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் பா.ஜனதாவை காலூன்ற விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.