செய்திகள்

ராமமோகன ராவ் அதிகார எல்லையை தாண்டி பேசுகிறார்: வைகோ குற்றச்சாட்டு

Published On 2016-12-28 03:07 GMT   |   Update On 2016-12-28 07:20 GMT
ராமமோகன ராவ் நேற்று வெடித்து சிதறுவதுபோல் கருத்துகள் கூறியிருப்பது அவருடைய அதிகார எல்லையையும் தாண்டிப் பேசுவதாக எனக்கு தோன்றுகிறது என்று வைகோ கூறி உள்ளார்.
சென்னை:

ராமமோகன ராவ் பேட்டி குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:-

இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்படாத விசித்திரமான, வித்தியாசமான, அபூர்வமான நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது. தலைமைச் செயலாளர் இல்லமும், அலுவலகமும் வருமான வரித்துறையினரால் சோதனையிடப்பட்டு உள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசின் அனுமதி தேவை. வருமான வரித்துறை சோதனைக்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை.

மாநில காவல் துறையை பயன்படுத்தாமல், மத்திய அரசு காவல் துறையை பயன்படுத்துவதற்கு வருமான வரித்துறைக்கு அதிகாரம் இருக்கிறது. ஆயினும் மாநில அரசுக்கும், மாநில காவல்துறைக்கும் தெரிவித்துவிட்டு இப்படிப்பட்ட சோதனையில் ஈடுபடுவது தான் கூட்டாட்சி தத்துவத்திற்கு கேடு செய்யாமல் இருக்கும். ராமமோகன ராவ் நேற்று வெடித்து சிதறுவதுபோல் கருத்துகள் கூறியிருப்பது அவருடைய அதிகார எல்லையையும் தாண்டிப் பேசுவதாக எனக்கு தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News