செய்திகள்

கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: ஆர்.நல்லக்கண்ணு பேட்டி

Published On 2016-09-14 10:02 IST   |   Update On 2016-09-14 17:08:00 IST
கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

காவிரி பிரச்சனை இப்போது தலை தூக்கியுள்ளது. காவிரி நீர் என்பது தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் அல்லாமல் தமிழகத்திற்கு பொதுவானது. காவிரி நீரால் தமிழத்தில் 19 மாவட்டங்கள் பயன் அடைந்து வருகின்றன.

இந்த பிரச்சனையில் அரசு அனைத்து கட்சிகளையும் அழைத்து பேசி ஒரே முடிவாக எடுக்க வேண்டும். காவிரி பிரச்சனையில் நாம் நமது உரிமையை கேட்கிறோம்.

தற்போது கர்நாடகத்தில் மொழி வெறியை தூண்டி தமிழ் இளைஞர்களை அடித்து துன்புறுத்துகின்றனர். இதை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை அந்த மாநில அரசு அளித்து சேதம் அடைந்த வாகனங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News