பெண்கள் உலகம்
வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

Published On 2021-12-21 04:27 GMT   |   Update On 2021-12-21 08:36 GMT
வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும். வெற்றி பெற என்ன வழிகள் உண்டு? எப்படி நடந்தால் வெற்றி கிடைக்கும்? வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தோல்வி நிரந்தரமானதல்ல. நம்முடைய முயற்சிகளில் சில, தோல்வி அடையலாம். ஆனால், முயற்சியே எடுக்காமல் விட்டுவிட்டால், நம்முடைய லட்சியம் கண் முன் மறையும் ‘புகை’போல காணாமல்போகும். வெற்றி அடைய சில வழிகளை அறிவோம்...!

வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு. உங்களை ‘நம்பர் ஒன்’ ஆக்குவதும் உழைப்புதான்.

உடல் நலத்தைப் போலவே மனநலமும் வெற்றிக்கு மிகவும் அவசியம். உடற்பயிற்சியிலும், மனநலம் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.

வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும். வெற்றி பெற என்ன வழிகள் உண்டு? எப்படி நடந்தால் வெற்றி கிடைக்கும்? வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும். வெற்றியையும், தோல்வியையும் சமமாக மதிக்கும் பண்பு வேண்டும். தோல்விதான் வெற்றியின் முதல் படி.

எதற்கும் அஞ்சக்கூடாது. புதிய விஷயங்களை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். புதிய மனிதர்களையும், புதிய சூழல்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

பிடித்த காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதைவிட, செய்யும் காரியத்தை நமக்குப் பிடித்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

முடியாது, நடக்காது, தெரியாது என்ற வார்த்தைகளை சொல்வதை தவிர்க்க வேண்டும். ஒருசெயலை வேறு எப்படி செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். முயற்சிக்க வேண்டும்.

பாதுகாப்பானது எனக்கருதி ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள், ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

துணிச்சலாக முடிவுகள் எடுக்க வேண்டும். வெற்றி - தோல்வி பற்றிய தெளிவு இல்லாவிட்டால் அது தேவையில்லாத மன அழுத்தத்தையும், சோர்வையும் உருவாக்கிவிடும்.

செய்ய நினைத்த செயலுக்காக ஒவ்வொரு வினாடியையும் வீணாக்காமல் பயன்படுத்துங்கள். விழித்திருக்கும் நேரமெல்லாம் விழிப்புடன் இருங்கள். உழைப்புடன் இருங்கள்.

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அனுபவம் மிக்கவர்களிடமும், சாதித்தவர்களிடமும் கற்றுக்கொள்ளுங்கள். வாழ்வில் எல்லா அம்சங்களுமே உங்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடாது. போராடவும், புதிய வழிகளை உருவாக்கவும் எப்போதும் தயாராக இருங்கள்.

நாளை என்று தள்ளிப் போடக்கூடாது. விழிப்புணர்ச்சியோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள். லட்சியங்களை உயிராக மதியுங்கள். அதை எட்டுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுங்கள். சற்றும் பின்வாங்காதீர்கள்.

‘மற்றவர்கள் நம்மை வழிநடத்த வேண்டும்’, ‘மற்றவர்கள் நமக்கு உதவ வேண்டும்’ என்று நினைக்கக்கூடாது. உங்கள் வளர்ச்சிக்கு சிலர் உறுதுணை புரியலாமே தவிர, வெற்றிக்கான உழைப்பை செய்ய வேண்டியது நீங்கள்தான். எனவே அடுத்தவரைவிட உங்கள் மீதும், உழைப்பிலும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

கவலைப்படாதீர்கள். கவலையால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. ஆர்வம், ஈடுபாடு, திறமை, உழைப்பும் இருந்தால் நிச்சயம் சாதனை படைக்கலாம்.

மற்றவர்கள் பாராட்டும் விதமாக வளர வேண்டும் என்று நினைப்பது போலவே, மற்றவர்களைப் பாராட்டும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை மற்றவர்கள் வெற்றி பெற உதவுவதுகூட உங்கள் வெற்றிக்குத் துணை நிற்கும்.

இந்த உலகம் நம்மைப்பற்றி ‘வாழ்ந்தோம், வீழ்ந்தோம்’ என்று பேசாமல், “வாழ்ந்தார்கள், வென்றார்கள்” என்று சொல்லும்படி சாதித்துக் காட்டுவோம்...

தேன்மொழி, முதலாம் ஆண்டு, தியாகராஜர் கல்லூரி, மதுரை.
Tags:    

Similar News