லைஃப்ஸ்டைல்
உயர்வு தரும் உழைப்பு

உயர்வு தரும் உழைப்பு

Published On 2021-11-10 07:24 GMT   |   Update On 2021-11-10 07:24 GMT
உழைக்க நான் தயார் ஆனால் வாய்ப்பு இல்லையே, வழி தெரியவில்லையே எனப் புலம்பித் தவிக்காதே. வான் உள்ளவும் உழைக்கும் வாய்ப்பு உள்ளது.
உலகம் உன்னை மதிக்க வேண்டும் என்றால் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். உழைப்பவனையே உச்சியில் வைத்து ஆடும் இந்த உலகம். தொடர்ந்து, கடினமாக உழைத்தால் குறிக்கோளை அடைய முடியும். உழைப்பு பிழைப்புக்கு மட்டும் வழியல்ல; உலகில் நீ நிலைத்து நிற்கவும் அதுதான் வழி. உழைப்பை நீ மதித்தால் அது உன்னை மதிக்கும். நீ வாழ்க்கையில் உயர அது வழி வகுக்கும். உழைக்க நான் தயார் ஆனால் வாய்ப்பு இல்லையே, வழி தெரியவில்லையே எனப் புலம்பித் தவிக்காதே. வான் உள்ளவும் உழைக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம் மக்கள் பெருக்கம். தேவை அதிகம். தேவை பெருகப் பெருக உழைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். இடையில் ஏற்படும் தடைகள் உன்னை கண்ணீர் வடிக்க செய்யலாம். 'ஏன் பிறந்தோம்' என்று கூட நினைக்க தோன்றலாம். தளர்வடையாதே, துவண்டு போகாதே. தொடர்ந்து உழை. வெற்றி உனதே.

உழைத்துத்தான் வழியை தேட வேண்டும். அது உன்னைத் தேடி வராது. உழைப்பவர்கள் மட்டுமே உலக வரலாற்றில் இடம்பெற முடியும். கின்னஸ் சாதனை நிகழ்த்த முடியும். உழைக்காதவர்கள் உலக வரலாற்றை உற்று பார்க்கக்கூட முடியாது. உழைக்காதவர்களை உலகம் உதறித் தள்ளிவிடும். உற்ற மனைவிகூட வெறுத்து விடுவாள். 'தண்டச்சோறு', 'உதவாக்கரை' என உலகம் எள்ளி நகையாடும். உடன்பிறப்புகள் உழைக்காதவர்களை புறக்கணிப்பார்கள். நண்பர்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். உழைக்காதவர்களுக்கு உற்ற நண்பர்கள் இருக்கமாட்டார்கள். உழைக்காத கும்பல் நாளடைவில் கலைந்துவிடும். உழைப்பால் உயர்ந்தவர்களை உலகம் இனங்கண்டு கொள்ளும்; பாராட்டும்; புகழும். உழைப்பவர்கள் உலக வரலாற்றில் நிலையான இடம் பெறுவார்கள்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த காக்ஸ்டன், அச்சகம் அமைத்து அரும்பெரும் சாதனை படைத்தவர். ஆரம்பகாலத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இன்று 'காக்ஸ்டன்' பெயர் உலக வரலாற்றில் நிலைத்து நிற்கக் காரணம் எது? 'உழைப்பு,' தொடர் உழைப்பு. ரெயில் எந்திரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஜார்ஜ் ஸ்டீபன்சன் உலகப் போக்குவரத்து வரலாற்றில் நிலைத்த பெயர் பெற்றது எப்படி? அவரின் உழைப்பேயன்றி வேறு யாது? தொலைநோக்கி, வெப்பமானி, திசைகாட்டும் கருவி, நிலத்தடி நீர் அறியும் கருவி ஆகியவற்றை கண்டுபிடித்து உலக சாதனை பெற்ற கலிலியோ, உலக வரலாற்றில் இடம் பெற்றது எதனால்? உழைப்பினால் மட்டுமே.
Tags:    

Similar News