லைஃப்ஸ்டைல்
‘நெட் பேங்கிங்’ திருட்டை தடுப்பது எப்படி?

‘நெட் பேங்கிங்’ திருட்டை தடுப்பது எப்படி?

Published On 2021-10-22 04:34 GMT   |   Update On 2021-10-22 07:12 GMT
வங்கி கணக்கு ரகசியங்களை திருடும் வைரஸ்களை பலர் உருவாக்கி வருகின்றனர். எனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாடிக்கையாளர்கள் கையாள வேண்டியுள்ளது.
நாகரீக வளர்ச்சியில் இன்று நெட்பேங்கிங் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வங்கிகளுக்கு சென்று பணபரிமாற்றம் செய்வதற்கு பதிலாக இருந்த இடத்திலேயே கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போன் மூலம் இணையதளம் வழியாக பணபரி மாற்றத்தை பொதுமக்கள் விரும்புகின்றனர்.

வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன் டைம் பாஸ்வேர்டை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் வழங்குகின்றன. இது தவிர இன்டர்நெட் பேங்கிங்கும் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு ரகசியங்களை திருடும் வைரஸ்களை பலர் உருவாக்கி வருகின்றனர். எனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாடிக்கையாளர்கள் கையாள வேண்டியுள்ளது.

பாதுகாப்பாக மொபைல் பேங்கிங் செய்ய சில குறிப்புகள்:

உங்கள் செல்போனுக்கு பாஸ்வேர்ட் வைக்கவும். செல்போனில் எஸ்.எம்.எஸ். அலர்ட் வருமாறு பதிவு செய்யவும். செல்போனை வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இன்டர்நெட் வசதி கொண்ட நவீன செல்போன்களை வைரஸ்கள் பாதிக்கக் கூடிய ஆபத்து அதிகம். உங்கள் செல்போனில் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை பதிவேற்றம் செய்யவும்.

இணையதளத்தில் இருந்து எந்த விதமான கோப்புகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். (உதாரணமாக பயன்பாடுகள், விளையாட்டுகள், படங்கள், இசை). டெபிட் / கிரெடிட் கார்ட்டு எண்கள், சிவிவி எண்கள் மற்றும் பின் நம்பர் போன்ற ரகசிய தகவல்களை செல்போனில் பதிவு செய்ய வேண்டாம். உங்களது செல்போன் தொலைந்து போனால் மொபைல் பேங்கிங் வசதியை செயலிழக்கச் செய்யுங்கள். மொபைல் பேங்கிக்கிற்கான ரகசிய எண்களை அவ்வப்போது மாற்றுங்கள். அது பிறர் திருட வாய்ப்பை தவிர்க்கும்.

வெளிப்படையான பாஸ்வேர்டுகளை (பிறப்பு பெயர், தேதி) பயன்படுத்த வேண்டாம். மொபைல் பேங்கிங்கின் போது பாதுகாப்பற்ற வை-பை இணைப்பை பயன்படுத்த வேண்டாம். ப்ளூடூத்துடன் கூடிய சேவைகளை துண்டியுங்கள். எனினும், மேற்கண்ட விஷயங்களை முறையாக பின்பற்றினாலும் மொபைல் பேங்கிங் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும், ஒரு பயன்பாட்டாளராக உங்கள் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என உறுதி செய்ய வேண்டும்.

Tags:    

Similar News