லைஃப்ஸ்டைல்
பெண்களுக்கு வருமானம் தரும் பகுதிநேர தொழில்கள்

பெண்களுக்கு வருமானம் தரும் பகுதிநேர தொழில்கள்

Published On 2021-04-26 08:13 GMT   |   Update On 2021-04-26 08:13 GMT
சிலர் பகுதி நேர தொழிலையே, எதிர்கால தொழிலாகவும் மாற்றியிருக்கிறார்கள். அந்தவகையில் பெண்களுக்கு கைகொடுக்கும் பகுதிநேர தொழில்கள் சிலவற்றை பார்ப்போம்.
மிகவும் இயல்பான விஷயங்களைகூட, பகுதி நேர தொழிலாக முன்னெடுக்கும் ஆர்வம் இக்கால கல்லூரி மாணவர்களுக்கு அதிகரித்திருக்கிறது. அதாவது பகலில் கல்லூரி படிப்பு, இரவில் தங்களால் முயன்ற பகுதி நேர தொழில் என பிசியாக இயங்குகிறார்கள். சிலர் பகுதி நேர தொழிலையே, எதிர்கால தொழிலாகவும் மாற்றியிருக்கிறார்கள். அந்தவகையில் கல்லூரி மாணவர்களுக்கு கைகொடுக்கும் பகுதிநேர தொழில்கள் சிலவற்றை பார்ப்போம்.

* கிராபிக்ஸ் டிசைனிங்

வர்த்தக வாய்ப்புகள் அதிகம் கொண்ட ஒரு தொழில் பிரிவு இதுவாகும். ஹோம் மேட் பிசினஸ், பார்ட் டைம் பிசினஸ் என்ற வகையில் இளம் தொழில் முனைவோர்கள் கவனம் செலுத்த வேண்டிய பிரிவும் இதுவாகும். காரணம் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களுக்கும் விளம்பரம் அவசியம் என்ற நிலையில் அவற்றிற்கான விஷுவல் வடிவமைப்பை தொழில்நுட்ப ரீதியாக செய்துவருபவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தேடி வருகின்றன. இந்த தொழில் பிரிவில் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்கள் தங்களுடைய அனுபவத்தை வளர்த்துக்கொண்டு ஏராளமான வர்த்தக வாய்ப்புகளை பெற முடியும். குறிப்பாக காண்ட்ராக்ட் அடிப்படையில் செய்து கொடுக்கலாம்.

* கம்ப்யூட்டர் ரிப்பேர் மையம்

இப்போது பள்ளிக்கூட மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் கம்ப்யூட்டரைப் பயன் படுத்துகிறார்கள். சாதாரணமாக ஒரு நகரத்தின் ஒரு ஏரியாவில் உள்ளவர்களை கணக்கு எடுத்துக்கொண்டால் சுமார் 65 முதல் 75 சதவிகிதம் வரை கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் சம்பந்தமான ரிப்பேர் மற்றும் சர்வீஸ் செய்வதற்கு பெரிய நிறுவனங்களை அணுகுவதில்லை. நம்பிக்கைக்கு உரிய தனிநபர்களை அல்லது அவர்களது சிறிய நிறுவனங்களை அணுகுகிறார்கள். அந்த அடிப் படையில் தொழில்நுட்பத்தை அறிந்த கல்லூரி மாணவர்கள் சுலபமாக இந்த தொழில் பிரிவை வீட்டின் ஒரு பகுதியில் செய்யலாம்.

* பேக்கிங் மற்றும் ரீ பேக்கிங்

சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தொழில்துறை பகுதிகள் ஆகியவற்றிற்கு அருகாமையில் குடியிருப்பவர்களுக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பை பேக்கிங் மற்றும் ரீ பேக்கிங் ஆகிய பிரிவு வழங்குகிறது. அதாவது, அந்தப் பகுதியில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களை அணுகி அவர்களுடைய தயாரிப்புகளை பெற்று அவற்றை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அல்லது குறிப்பிட்ட அளவுகளில் முறையாக அடுக்கி பெரிய தொட்டிகளில் அடைத்து கச்சிதமாக பேக்கிங் செய்யும் தொழில் இதுவாகும். பெரிய அளவில் முதலீடுகள் தேவைப்படாத இந்த தொழிலை ஆர்வமுள்ள இளைஞர்கள் எளிதாக மேற்கொள்ளலாம்.

* நெட்வொர்க் மார்க்கெட்டிங்

அதீத அளவில் வளர்ச்சி பெற்றுள்ள சமீபத்திய தொழில் முயற்சிகளில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் என்பதும் ஒன்றாகும். உடல் நலம், அழகு சாதன பொருட்கள், சரும பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான துணை உணவுப் பொருட்கள் ஆகிய நுகர்வோர் பொருட்களை சமூக வலைத்தளங்களில் சந்தைப்படுத்தி, விற்பனை செய்யும் நவீன முயற்சி இதுவாகும். அதனால் வீட்டில் இருந்தபடியே பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலமாக பொருட்களை வாங்கி, விற்கமுடியும்.
Tags:    

Similar News