லைஃப்ஸ்டைல்
திட்டமிட்ட செலவுகளும்.. சிக்கன திருமணமும்..

திட்டமிட்ட செலவுகளும்.. சிக்கன திருமணமும்..

Published On 2021-04-21 03:26 GMT   |   Update On 2021-04-21 03:26 GMT
திருமணத்திற்கான மொத்த செலவில் மண்டபம், ஆடை, நகை, சீர்வரிசை என பல விஷயங்களில் பட்ஜெட்டை விடவும் சிக்கனமாக திருமணத்தை நடத்த உதவும் சில வழிகளை காணலாம்.
திருமணம் என்பது வாழ்க்கையின் முக்கிய தருணம் என்பதால் அதைச்சார்ந்த பல கனவுகள் எதிர்பார்ப்புகள் மணமக்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் இருக்கும். திருமணத்திற்கான மொத்த செலவில் மண்டபம், ஆடை, நகை, சீர்வரிசை என பல விஷயங்களில் பட்ஜெட்டை விடவும் சிக்கனமாக திருமணத்தை நடத்த உதவும் சில வழிகளை காணலாம்.

திருமணம் என்றதுமே முதலில் முடிவு செய்ய வேண்டியது மண்டபம். இந்த விஷயத்தில் சீசன் இல்லாத மாதங்களில் திருமணத்தை நடத்தலாம். திருமணத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை இருநூறுக்கும் மேல் இருந்தால் திறந்தவெளி மைதானத்தை தேர்வு செய்து மண்டப வாடகையில் 50 சதவீதம் வரை சேமிக்கலாம்.

மணமேடை முதல் மண்டபம் வரை அலங்கரிப்பது அவசியமாகி விட்டது. அந்த செலவை குறைக்க சீசனுக்கு ஏற்ற மலர்களை பயன்படுத்தலாம். விலை குறையும். செயற்கை மலர்கள் கொண்டும். அலங்காரம் செய்தால் செலவு பாதியாக குறையும்.

திருமணம் என்றாலே ஆடைகள் விஷயத்தில் பல  ஆயிரம் ரூபாய் செலவழிப்பவர்கள் உண்டு. ஆடம்பரமாக எடுக்கும் உடைகளை மீண்டும் அணிய பலரும் விரும்புவதில்லை. முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் ஆடைகள் எடுத்து கொண்டு ஆடம்பரமான உடைகளை வாடகைக்கு பெற்று அணிந்து கொண்டு செலவை கட்டுப்படுத்தலாம்.

உடைகளை போன்றே நகைகளும் வாடகைக்கு கிடைக்கின்றன. அணியும் உடைக்கு ஏற்ப இந்த நகைகளை தேர்வு செய்து அணிந்து கொள்ளலாம். இவற்றில் ஆடம்பரம் முதல் எளிமையான டிசைன்கள் வரை பல ரகங்கள் இருக்கின்றன.

இப்போது விழாக்களுக்கு அழைப்பு விடுக்க பல முறைகள் உள்ளன. ஸ்மார்ட் போன் என்பதே வாழ்க்கை என்ற நிலையில் இ-இன்லைட் மூலம்  அனைவருக்கும் அழைப்பு விடுக்கலாம். அழைப்பிதழ் தேர்வு அச்சடிப்பு, தபால் செலவு என எதுவுமின்றி அழைக்கலாம். அதில் பல வடிவங்கள் வீடியோ ஆகியவை உள்ளன.

திருமணத்தில் பல உணவு வகைகளை பரிமாறி ஆடம்பரத்தை காட்ட நினைத்தால் பட்ஜெட் நிச்சயம் எகிறி விடும். எத்தனை பேர் திருமணத்திற்கு வருவார்கள் என்பதை தோராயமாக கணக்கிட்டு சமைப்பதே போதுமானதாக இருக்கும்.

திருமண நிகழ்வில் அனைத்தையும் புகைப்படம் எடுக்காமல் முக்கிய நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்யலாம். இதற்காக புது சிந்தனைகளுடன் பலரும் குறைந்த பட்ஜெட்டில் புகைப்படம் வீடியோ எடுக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இதன் மூலம் செலவை கட்டுப்படுத்தலாம்.
Tags:    

Similar News