லைஃப்ஸ்டைல்
வேலை செய்யும் பெண்களுக்கு ஜீவனாம்சம் உண்டா?

வேலை செய்யும் பெண்களுக்கு ஜீவனாம்சம் உண்டா?

Published On 2021-01-06 07:30 GMT   |   Update On 2021-01-06 07:30 GMT
விவாகரத்து பெறும் சிக்கலான விஷயத்தை பண விவகாரம் மேலும் மோசமாக்கலாம். விவாகரத்து பற்றி பரிசீலிக்கும் போது, பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில பொதுவான கேள்விகள்:
விவாகரத்து பெறும் சிக்கலான விஷயத்தை பண விவகாரம் மேலும் மோசமாக்கலாம். விவாகரத்து சுமூகமாக அமைய அது இரு தரப்பினருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் விதிகளை அறிந்திருக்க வேண்டும். சட்டப்படி உங்கள் உரிமைகள் எவை மற்றும் அவற்றை கோருவதற்கான வழிகள் பற்றி அறிந்திருந்தால் விவாகரத்து போன்ற சிக்கலான நேரங்களில் பணம் பற்றி பேசுவது எளிதாக அமையும். 

ஒருவர் தனது துணைக்கு சட்டப்படி வழங்க கடமைப்பட்டுள்ள நிதி ஆதரவைத்தான் ஜீவனாம்சம் என்று அழைக்கிறார்கள். பிரிவதற்கு முன்பாகவும் தரப்படலாம் அல்லது பிரிந்த பிறகு பராமரிப்பு செலவுக்காகவும் பெறப்படலாம். இதைப் பெறும் உரிமை என்பது திருமண மற்றும் விவாகரத்து சட்டங்களின் முக்கிய அம்சமாகும். விவாகரத்து பற்றி பரிசீலிக்கும் போது, பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில பொதுவான கேள்விகள்:

வேலைக்கு செல்வதால் ஜீவனாம்சம் பெற முடியாது என சொல்லி யாரேனும் ஏமாற்ற முயன்றால் அவர்கள் முகத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) 125வது பிரிவை தூக்கி வீசவும். “பணிபுரியும் பெண்ணாக இருப்பது ஒரு பெண் ஜீவனாம்சம் பெறுவதில் இருந்து தகுதி இழக்கச் செய்யவில்லை என இந்தப் பிரிவு தெரிவிக்கிறது. 

ஆனால், வேலை மூலம் மட்டுமே தன்னை பராமரித்துக்கொள்ள முடியாது என்றும் தன் சம்பளத்தைவிட கணவரது சம்பளம் அதிகம் என்றும் அவர் நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும். கணவரின் அந்தஸ்திற்கு ஏற்ப மனைவி வாழ வழிசெய்வதே இதன் நோக்கம்.

மதம், சாதி, இனம், படிப்பு ஆகிய பேதங்கள் இல்லாமல் எந்த ஒரு பெண்னும், தன்னை பராமரித்துக்கொள்ள முடியாவிட்டால், அவரது கணவரால் ஆதரவு அளிக்க முடியும் என்றால் அவரிடம் இருந்து பராமரிப்பு கோரலாம். “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சமூக நீதி வழங்குவதே இந்த பிரிவின் முக்கிய நோக்கம். விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்யாவிட்டாலும் கூட நீங்கள் பராமரிப்பு கோர தகுதி உடையவர்.
Tags:    

Similar News