தோல்வி அடைந்து விட்டோம் என்று காரணத்துக்காக தவறான முடிவுகளை எடுப்பது முட்டாள்தனம். தோல்வி இன்றி வரலாறா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முதல் தோல்வி அடைந்தாலும் அதனை மறுமுறை திருத்திக் கொண்டு வெற்றி பெற முயற்சிப்போம்.
நம்மில் பலர் கூறுவார்கள், “நன்கு யோசித்து தொடங்கு, தொடங்கியபின் யோசிக்காதே“ என்று. எதை யோசிக்க வேண்டும்?, எப்படி யோசிக்க வேண்டும்? என்றால் எதையும் ஏற்கும் பக்குவம் உள்ளதா! வெற்றி வந்தால் என்ன செய்வது!, ஒருவேளை தோல்வி வந்தால் என்ன செய்வது! அடுத்த கட்டத்தை நோக்கி எப்படி நகர்வது என்பதை யோசிக்க வேண்டும். முயற்சி மேற்கொள்ளும் போதே தோல்வி தான் வரும் என எண்ணாமல் தோல்வியும் வர வாய்ப்புள்ளது என்று தான் என்ன வேண்டும்.
மேலும், ஒரு முயற்சி மேற்கொண்டு நாம் அதில் தோற்றுப் போனால் உடனே வருந்துவதோ, துவண்டு போகவோ கூடாது. காரணம் நாம் அடைந்தது தோல்வி தானே தவிர குற்றமில்லை. குற்றம் செய்தவன்தான் தன் குற்றத்தை எண்ணி வருந்த வேண்டும். தோல்வி தந்த பாடத்தை நாம் முழுமையாக ஏற்றுக்கொண்டு கண்களை துடைத்து மறுபடியும் வெற்றி காண முயல வேண்டும். எவர் ஒருவர் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளாரோ அவருக்கு தான் அதிக தோல்விகள் வந்திருக்கும்.
இவ்வுலகில் சாதனை படைத்த விஞ்ஞானிகள், தலைவர்கள், மேதைகள், ஆராய்ச்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் இது புலப்படும். தோல்வி அடைந்து விட்டோம் என்று காரணத்துக்காக தவறான முடிவுகளை எடுப்பது முட்டாள் தனம். தோல்வி இன்றி வரலாறா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முதல் தோல்வி அடைந்தாலும் அதனை மறுமுறை திருத்திக் கொண்டு வெற்றி பெற முயற்சிப்போம்.