லைஃப்ஸ்டைல்
நீங்கள் செல்போனுக்கு பொது இடத்தில் சார்ஜ் போடுபவரா? அப்ப இந்த பிரச்சனைகள் வரலாம்

நீங்கள் செல்போனுக்கு பொது இடத்தில் சார்ஜ் போடுபவரா? அப்ப இந்த பிரச்சனைகள் வரலாம்

Published On 2020-10-08 08:27 GMT   |   Update On 2020-10-08 09:27 GMT
செல்போனில் சார்ஜ் இல்லாத போது தவிர்க்க முடியாத சூழலில் பொது இடங்களில் செல்போனில் சார்ஜ் போட வேண்டியிருந்தால் இந்த விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் பயணம் செய்ய கிளம்பும்போதோ வெளியில் செல்லும்போதோ செல்போனில் சார்ஜ் முழுமையாக இருப்பதுபோல பார்த்துகொள்ள வேண்டும். அப்படிப் பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் செல்போனில் சார்ஜ் போட வேண்டியிருக்கும்.

தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்த வேண்டியதாகியிருக்கும். அப்படியான நேரங்களில் நீங்கள் 5 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று: பொதுஇடங்களில் செல்போனில் சார்ஜ் போட்டுவிட்டு, முன்பின் அறிமுகம் இல்லாத நபரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ஏடிஎம் போவது, டாய்லெட் போவது போன்ற பழக்கம் இருந்தால் அதைத் தவிருங்கள். ஏனெனில், உங்கள் செல்போலை லாக் பண்ணாமல் இருந்தால் அதில் உள்ள செய்திகள், வங்கி விவரங்களை அவர் பார்த்துவிட வாய்ப்பிருக்கிறது. உங்கள் மொபைலையே திருடிச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இரண்டு: பொதுவாக செல்போனை சார்ஜ் போடும்போது இண்டர்நெட்டை ஆஃப் செய்துவிட்டால் சற்று விரைவாக சார்ஜாகும். இப்போது நீங்கள் அவசரமாக சார்ஜ் போடுவதால் இண்டர்நெட்டை ஆஃப் செய்வதோடு, சைலண்ட் மோடில் வைத்து சார்ஜ் போட்டால் விரைவாகச் சார்ஜ் ஆகும். சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவதை எப்போதுமே தவிருங்கள். சார்ஜ் போட்டுக்கொண்டு வாட்ஸப், ஃபேஸ்புக் பார்த்தால் குறைவாகவே சார்ஜ் ஆகும்.

மூன்று: சில இடங்களில் ஒரே நேரத்தில் பலரும் செல்போனில் சார்ஜ் போட்டுக்கொள்ள வசதியாக நிறைய usb இணைப்புகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அந்த இடங்களில் சார்ஜ் போடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், usb இணைப்பு மறுபக்கம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கலாம். அதன்மூலம் உங்களின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரம் திருப்பட வாய்ப்புகள் உள்ளன. பயண அவசரத்தில் உங்களுக்கு வந்த நோட்டிபிகேஷன்களைக்கூட கவனித்திருக்க மாட்டீர்கள். எனவே, usb இணைப்பில் தயாராக இருக்கும் சார்ஜர்கள் மறுபக்கம் வேறு எதோடும் இணைக்கப்பட வில்லை என உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அதில் சார்ஜ் போடவும். முடிந்தளவு உங்களில் சொந்த சார்ஜரை எடுத்துச் சென்று அதில் சார்ஜர் போட்டுக்கொள்வதே சரியானதாக இருக்கும்.

நான்கு: பாஸ்வேர்டு இல்லாமல் ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்திருக்கிறீர்களா என்று செக் பண்ணுங்கள். ஏனெனில், சார்ஜர் ஏற வேண்டும் என்ற அவசரத்தில் அதைக் கவனிக்காமல் இருக்கலாம். அதை மற்றவர்கள் பயன்படுத்தினால் உங்களின் டேட்டா காலியாகி விடும்.

ஐந்து: வழக்கமாக வீட்டில், ஆபிஸில் சார்ஜ் போட்டவுடன் செல்போனை மட்டும் எடுத்துக்கொண்டு பயன்படுத்த ஆரம்பித்துவிடுவோம். இது இயல்பான பழக்கங்களில் ஒன்றாகி விட்டது. பொதுஇடங்களில் சார்ஜ் போடும்போது அதே பழக்கம் வந்து சார்ஜரை அங்கேயே விட்டுவிடாதீர்கள். அதுவும் சார்ஜர் போட்டுக்கொண்டிருக்கும்போது போன் வந்தால் நிச்சயம் பேசிவிட்டு வந்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே கவனம் அவசியம்.
Tags:    

Similar News