லைஃப்ஸ்டைல்

மாமியாரிடம் மருமகள் எதிர்பார்க்கும் விஷயங்கள்

Published On 2016-07-30 03:37 GMT   |   Update On 2016-07-30 03:37 GMT
உலகில் எந்த பிரச்சனையை வேண்டுமானாலும் தீர்த்துவிடலாம், ஆனால் மாமியார்- மருமகள் பிரச்சனையை தீர்ப்பது ரொம்ப கஷ்டம்.
உலகில் எந்த பிரச்சனையை வேண்டுமானாலும் தீர்த்துவிடலாம், ஆனால் மாமியார்- மருமகள் பிரச்சனையை தீர்ப்பது என்பது ஓடும் நீரில் ஓவியம் வரைவது போன்றது.

பல்வேறு கனவுகளோடு புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் மருமகள், எங்கே நாம் இத்தனை வருடங்களாக கட்டி வைத்திருந்த கனவு கோட்டையை இடித்துவிடுவாளோ என நினைக்கும் மாமியார்.

இந்த இருவரின் வெவ்வேறு எண்ணங்களும் ஒன்று சேர்கையில் வெடிக்கிறது சண்டை. மாறாக, இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டு, அன்போடு வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாகும்.

புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளிடம் மறைத்து வைக்காமல் வெளிப்படையாக பேச வேண்டும், ஏனெனில் அப்போது தான் அவர்களால் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியும்.

மருமகளுடன் பேசினாலும், உணர்வுப்பூர்வமான பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மருமகளாக அவர்களை நடத்துவதை விட சொந்த மகளாக நடத்துங்கள்.

கணவன்களிடம் எந்த விடயத்தை பகிர்ந்து கொண்டாலும், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது, அதுபோன்று மருமகள், மாமியாருக்குள் யார் முக்கியம் என்ற சூழ்நிலையையும் ஒருபோதும் உருவாக்க கூடாது.

ஒரு பெண் எந்த அளவுக்கு தனது தாயாரை விரும்புகிறாளோ, அதே அளவுக்கு மரியாதை தனது மாமியாருக்கும் கொடுக்க வேண்டும்.

மாமியார்- மருமகளுக்குள் பிரச்சனை வந்தால், அதனுள் உறவினர்கள் தலையிட அனுமதிக்க கூடாது.

இருவரில் யார் பெரியவர்கள் என்ற அகங்காரம் மற்றும் வேற்றுமை எப்போதும் வந்துவிடக்கூடாது.

தனது குழந்தையை தன்னுடைய வழியில் வளர்க்க வேண்டும் என்றே ஒவ்வொரு மருமகளும் நினைக்கிறார்கள், மாமியருக்கு குழந்தைகளை வளர்ப்பதில் அனுபவம் இருந்தாலும், அதனை அறிவுரையாக மட்டும் கேட்டுக் கொள்கிறேனே தவிர அவர்களது வழியில் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள்.

தனது கணவர் தவறு செய்தால், அதனை தான் திருத்த முயற்சி செய்யும் பட்சத்தில், இடையில் மாமியார் குறுக்கிடுவதையும் விரும்ப மாட்டார்கள்.

புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்தும் வைக்கும் தனக்கும் சில இலட்சியங்கள் இருக்கும், குடும்பத்தில் நடக்கும் எல்லாவற்றையும் சமாளித்து, குடும்பத்தை நல்வழிப்படுத்த ஆசைப்படுவேன், அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு நீங்கள் அளிக்க வேண்டும்.

நான் சொல்வதை கேட்டு தான் உங்கள் மகன் எல்லாவற்றையும் செய்கிறான் என நினைக்கக் கூடாது, உங்களுடைய மகன் தனது அறிவுக்குட்பட்டே நடக்கிறான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Similar News