லைஃப்ஸ்டைல்

கணவனை பற்றி மனைவி கூறும் குற்றச்சாட்டுகள்

Published On 2016-04-21 08:58 GMT   |   Update On 2016-04-21 08:58 GMT
கோபம் என்றால் குரைப்பதும் போன்றவை ஆண்கள் செய்யும் தவறுகள் என பெண்கள் கூறுகின்றனர்.
தோழிகள் வீட்டிற்கு சென்று வரும் போது நேர தாமதம் ஆவது, ஆண் தோழர்களுடனான நட்பை குறைத்துக் கொள்ள அல்லது முறித்துக் கொள்ள கூறுவது, ஆசை என்றால் அணைப்பதும், கோபம் என்றால் குரைப்பதும் என்ற சுபாவம் போன்றவை ஆண்கள் செய்யும் தவறுகள் என பெண்கள் கூறுகின்றனர்.

எங்கள் சுதந்திரத்தை நாங்கள் ஏன் ஆண்களிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டும். ஆண்கள் அதை பறிக்கவோ, தடை போடவோ உரிமை எங்கிருந்து வந்தது. காதலன், காதலி / கணவன், மனைவி உறவில் இணைந்த பிறகு ஏன் பாதுகாப்பு என்ற பெயரில் சுதந்திரத்தை பறிக்க பார்க்கிறீர்கள். தவறு செய்யும் போது தட்டிக் கேட்க உரிமை இருக்கிறது, அதை தவறென கூறவில்லை என பெண்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வெளி ஊர்களுக்கு என்றால் பரவாயில்லை. பிறந்து வளர்ந்த ஊரில் தோழியை சென்று பார்த்து வருவதற்கு கூட பாதுகாப்பு காரணம் காட்டி சில ஆண்கள் தடை போடுவது அதீத காதலாக இருப்பினும், உறவில் விரிசல் ஏற்பட காரணியாக இருக்கிறதாம்.

ஆண்களுக்கு பெண் தோழிகள் இருப்பதை இயல்பாக எடுத்துக் கொள்ளும் பலரும் பெண்களுக்கு ஆண் தோழர்கள் இருப்பதை இயல்பாக எடுத்துக் கொள்வதில்லை. இதில் பெரியளவில், மனதளவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

உறவு எப்போதும் கடுகு போல வெடிக்கும் சிலர். மகிழ்ச்சியான தருணத்தில் கட்டியணைக்கவும், உறவில் ஈடுபட மட்டும் நெருக்கம் காட்டுவது மனதளவில் பாதிப்பை உண்டாக்குகிறது என பெண்கள் கூறுகின்றனர்.

இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இந்த தருவாயில் ஆண்களுக்கு வேலை மாற்றம் வரும் போது உடனே இடம்பெயர்ந்து போக முனையும் அவர்கள் இதுவே, பெண்களுக்கு என்றால் வேண்டாம், வேறு வாய்ப்புகள் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று தட்டிக்கழிக்க செய்வது தவறு என்கின்றனர்.

இருவரும் வேலைக்கு சென்றால் மட்டமல்ல, வீட்டு மனைவியாக இருப்பினும் கூட தங்களுக்கு சம மதிப்பு, மரியாதை அளிக்க வேண்டும். இது அவர்களது கடமை என பெண்கள் கூறுகின்றனர்.

Similar News