லைஃப்ஸ்டைல்
கருப்பை வலிமைக்கு செய்ய வேண்டியவை...

கருப்பை வலிமைக்கு செய்ய வேண்டியவை...

Published On 2021-11-22 03:27 GMT   |   Update On 2021-11-22 03:27 GMT
உணவு போக நாம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறையும் கருப்பையை வலுப்படுத்தும். உடல் உழைப்பு, வசிப்பிடம், காலத்துக்கேற்ற உணவை விருப்பத்துடன் உண்ணுங்கள், சமச்சீரான உணவை நேசியுங்கள்.
தாய்மை புனிதமானது. பெண்களின் கருப்பை உட்சுவர் சீராக வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டீரோன் ஹார்மோன்கள் சீராக சுரக்க வேண்டும்.

சில பெண்களுக்கு கருப்பையின் உட்சுவர் மெலிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. கருப்பை உட்சுவர் வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து 10 மி.மீ. முதல் 12 மி.மீ. வரை வளர்வது கருவுறுதலுக்கு சிறந்தது. ஸ்கேனில் ஹெட்ரோஜினியஸ் அல்லது டிரிபிள் லேயர் என குறிப்பிடும் வளர்ச்சி, கருவுறுவதற்கு வசதியாக அமையும்.

கருப்பை உட்சுவரின் சீரான வளர்ச்சக்கு உளுந்து, கற்றாழை, சதாவேரி ஆகியவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது.

உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருப்பதை அறிந்தே தென் இந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர்கள் உளுந்தங்கஞ்சியை பயன்படுத்துகிறார்கள். பெண்கள் பூப்பு எய்தியவுடன் வழங்கப்படும் முதல் உணவு இது. மாதவிடாயின் முதல் 15 நாட்களுக்கு காலை உணவாக தொடர்ச்சியாக உண்டுவருவது கருப்பையை நன்கு பலப்படுத்தும்.

ஆலம் விழுது பால் கசாயமும் குடிக்கலாம். ஆலம் விழுது 50 கிராம், 200 மி.லி. பால், 200 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை 100 மி.லியாக சுண்டும்வரை காய்ச்சி, பின் வடிகட்டி கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து காலை, மாலையில் அருந்தலாம். பழங்களில் அத்தி, மாதுளை, கருப்பு திராட்சையை சாப்பிடுவதும் மிக்க பலனை தரும்.

உணவு போக நாம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறையும் கருப்பையை வலுப்படுத்தும். உடல் உழைப்பு, வசிப்பிடம், காலத்துக்கேற்ற உணவை விருப்பத்துடன் உண்ணுங்கள், சமச்சீரான உணவை நேசியுங்கள். குறைத்தது 45 நிமிட நடை பயிற்சி அல்லது திறந்தவெளி விளையாட்டு, உடலுக்கும் மனதுக்கும் சுகமளிக்கும் எளிய யோகா பயிற்சிகள் செய்யலாம்.. மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும் அவசியம்.
Tags:    

Similar News