லைஃப்ஸ்டைல்
இரவு வேலையால் ‘மெனோபாஸ்’ சிக்கல்

இரவு வேலையால் ‘மெனோபாஸ்’ சிக்கல்

Published On 2021-10-28 07:27 GMT   |   Update On 2021-10-28 07:27 GMT
20 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இரவு நேரத்தில் பணி புரியும் பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பிருக்கிறது.
இரவு நேர வேலை பார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் முன்கூட்டியே வந்து விடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள், நினைவாற்றல் குறைபாடு, எலும்புகள் பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவானது 20 மாதங்கள் தொடர்ந்து இரவு நேர ஷிப்டுகளில் பணி புரியும் பெண்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து அதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி 20 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இரவு நேரத்தில் பணி புரியும் பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பிருக்கிறது. அதுவே 20 ஆண்டுகளாக தொடர்ந்து சுழற்சி முறையில் இரவு பணியை மேற்கொள்பவர்களாக இருந்தால் 73 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

‘‘45 வயதுக்கு முன்பாகவே மெனோபாஸ் அடைந்த பெண்கள் என்றால் அவர்கள் பெரும்பாலும் இரவு ஷிப்டில் வேலைபார்ப்பவர்களாகவும் இருக்கக்கூடும். இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்வது அவசியம்’’ என்கிறார், ஆய்வை மேற்கொண்ட கனடாவில் உள்ள டல்கவுசி பல்கலைக்கழக பேராசிரியர், டேவிட் ஸ்டாக்.

இரவு நேரத்தில் வேலை செய்யும்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பதில் மாற்றம் ஏற்படுகிறது. அது முன்கூட்டியே மாதவிடாய் காலம் முடிவடைவதற்கு வழிவகுத்துவிடுகிறது. மேலும் கரு முட்டை உற்பத்தி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 22 ஆண்டுகளாக பகல் நேர பணியுடன் இரவு நேர பணியில் ஈடுபட்டிருக்கும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Tags:    

Similar News