search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாதவிடாய்
    X
    மாதவிடாய்

    மாதவிடாய் கால பராமரிப்பில் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் தவறு செய்கிறார்கள்?

    நாப்கின்கள் எந்தெந்த பொருட்களால் தயாராகிறது?, கேடு விளைவிக்கும் பொருட்கள் இருக்கிறதா? போன்ற விஷயங்களில் பெண்கள் கவனம் செலுத்துவதே இல்லை.
    பெண்கள் முக அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவு கூட நாப்கின் விஷயத்தில் கொடுப்பதில்லை. எத்தனை பெண்கள், சானிட்டரி நாப்கினின் காலாவதி தேதியை பார்த்து வாங்குகிறார்கள்?. யாருமே கவனிப்பதில்லை. பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், பேப்பர், அட்டை கழிவுகள் மூலமாகவே உருவாக்கப்படுகின்றன. காலாவதியான நாப்கின்களை பயன்படுத்துவது என்பது, காலாவதியான மாத்திரைகளால் உண்டாகும் ஆபத்தைவிட, இருமடங்கு கூடுதலானது. அதுவும் ‘சென்சிட்டிவ்' உறுப்பு என்பதால், ஆபத்து பலமடங்காகிறது.

    மேலும், நாப்கின்கள் எந்தெந்த பொருட்களால் தயாராகிறது?, கேடு விளைவிக்கும் பொருட்கள் இருக்கிறதா? போன்ற விஷயங்களில் பெண்கள் கவனம் செலுத்துவதே இல்லை.

    நிறைய பெண்கள் மாதவிடாய் காலங்களில் இயல்பிற்கு அதிகமான வலியை உணர்கிறார்கள். இந்த காலத்து பெண்களில் பலருக்கு பி.சி.ஓ.டி. பிரச்சினை வெகு இயல்பாகிவிட்டது. மலட்டுத் தன்மை, மார்பக புற்றுநோய், வெள்ளைப்படுதல் பிரச்சினைகளும் அதிகரித்திருக்கிறது. இவை அனைத்திற்கும், பெண்களின் மாதவிடாய் கால ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களும் முக்கிய காரணமாகின்றன.

    பெண் உறுப்பு மிகவும் மென்மையான பகுதி, உடலின் உள்ளுறுப்புகளில் சிறுநீரகப்பாதை, மலக்குடல், கருப்பை வாய் அனைத்தும் அருகருகில் அமர்ந்திருப்பதால் இதை கூடுதல் கவனத்துடன் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துகொள்ளவேண்டும். குறிப்பாக பருவமடைதலுக்கு பின்பு பெண்கள் தங்கள் வயதான காலத்திலும் இதை பின்பற்றவேண்டும். இல்லையெனில் கிருமிகள் தொற்று உருவாவதோடு அருகில் இருக்கும் இடங்களுக்கும் அவை வேகமாக பரவக்கூடும்.

    முறையான பராமரிப்பை செய்துவந்தாலே யோனி ஆரோக்கியமாக தொற்றில்லாமல் இருக்கும். பெண் உறுப்பை எப்போதும் எல்லா காலங்களிலும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். தினமும் இரண்டு வேளை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். சுத்தம் செய்யும் போது முன்னிருந்து பின்பக்கம் சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் கிருமிகள் உள்ளே தொற்றாது. நறுமணமிக்க சோப்புகளை பயன்படுத்த வேண்டாம். மாதவிடாய் காலங்களில் மட்டும் கிருமி நாசினி கொண்ட சோப்புகளை மருத்துவர்களின் அறிவுரையோடு பயன்படுத்துங்கள். பெண் உறுப்பை சுத்தம் செய்த பிறகு ஈரத்தோடு உள்ளாடை அணிய வேண்டாம்.
    Next Story
    ×