லைஃப்ஸ்டைல்
குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது

குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது

Published On 2020-04-27 06:19 GMT   |   Update On 2020-04-27 06:19 GMT
குழந்தைக்கு எந்த நிலையிலிருந்து (பொசிஷன்) தாய்ப்பால் கொடுக்க வசதியாக இருக்கிறது என்பதை பரிசோதித்து உறுதி செய்துகொள்ளவும்.
உலகிலேயே கலப்படம் செய்ய முடியாத ஓர் உணவு உண்டென்றால் அது தாய்ப்பால் தான். ஒரு குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவும் அதுதான். குழந்தை பிறப்புக்கு பிறகு, சில நாட்கள் மார்பகங்கள் பாலை சுரப்பதில்லை சீம்பாலைத்தான் சுரக்கின்றன. மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என சில முதியவர்கள் கூறுவார்கள். அதனால் முதல் மூன்று நாட்களுக்குத் தாய்ப்பால் புகட்டக்கூடாது என்றும் கூறுவதும் உண்டு. ஆனால், இது பெரும் தவறு. குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தும், நோய் எதிர்ப்பு ஊக்கிகளும், சீம்பாலில் அதிகம் இருப்பதால் அதைக் கட்டாயம் புகட்ட வேண்டும்.

தாய்ப்பால் ஊட்டும் முதல் சில மாதங்களுக்கு இரவு, பகல் என இரண்டு வேளைகளிலும் நல்ல உள்ளாடையை தாய்மார்கள் அணிய வேண்டும். காற்று முழுமையாகச் சென்றுவர, நைலானைவிட பருத்தியில் ஆன உள்ளாடையே சிறந்தது. குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் அணிவதற்கு என்றே தயாரிக்கப்பட்ட பிரத்தியேகமான உள்ளாடையை அணிவதும் நல்லது.

குழந்தைக்கு எந்த நிலையிலிருந்து (பொசிஷன்) தாய்ப்பால் கொடுக்க வசதியாக இருக்கிறது என்பதை பரிசோதித்து உறுதி செய்துகொள்ளவும். குழந்தையை மடியில் படுக்க வைத்துப் பாலூட்டுவதை வசதியாக கருதினால், குழந்தையின் தலை உயரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தை எப்போதெல்லாம் தாய்ப்பால் அருந்த விரும்புகிறதோ, அப்போதெல்லாம் பால் புகட்டுவது நல்லது. தொடக்கத்தில் அடிக்கடி இப்படி இருக்கக்கூடும். முதல் சில வாரங்களில் இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் கேட்கக்கூடும். பால் ஊட்டுவதற்காக தூக்கக் கலக்கத்துடன் குழந்தையை எழுப்ப வேண்டியிருக்கும். அதேநேரம் குழந்தை அழுதால், பசிக்குத்தான் அழுகிறது என்று நினைக்கக்கூடாது. வயிற்று வலி, சிறுநீர்-மலம் வெளியேறிய உள்ளாடை ஆகியவற்றாலும் கூட அழலாம். எதற்காக அழுகிறது என்பதை தாய்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

எத்தனை நேரம் பாலூட்ட வேண்டும் என்பதை குழந்தையே தீர்மானிக்கட்டும். குழந்தை போதுமான அளவு பால் அருந்துகிறது என்பதை உறுதிப்படுத்தும் வழி, அதன் எடை அதிகரிப்பது தான். குழந்தையை மருத்துவரிடம் கூட்டிச் செல்லும்போது, ஒவ்வொரு முறையும் எடை பார்க்கவும். ஒரு குழந்தைக்கு பாலூட்டுவதற்கான நல்ல அட்டவணை, 24 மணி நேரத்தில் ஆறு முறை பாலூட்டுவதுதான். அதற்கு குறைவாக இருந்தால் குழந்தைக்கு பசியின்மை இருக்கிறது என்று அர்த்தம்.

குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவ்வப்போது காற்றையும் சேர்த்துக் கொள்ளும். எனவே. பால் அருந்திய பிறகு, குழந்தையை தோளில் போட்டு முதுகின் மீது லேசாகத் தட்டிவிட்டாலோ அல்லது மடியில் குழந்தையை நிமிர்த்தி உட்கார வைத்துப் பிடித்துக்கொண்டாலோ, குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் காற்று வெளியேறிவிடும். தாய்ப்பால் தான் குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவு. இதில் ஒப்பிட இயலாத பல பண்புகள் உள்ளன. அது குழந்தைக்கு முற்றிலும் பாதுகாப்பானது. தீங்கு செய்யும் பாக்டீரியாக்களும் மற்றக் கிருமிகளும் அதில் சேரவே முடியாது.

Tags:    

Similar News