பெண்கள் உலகம்
ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

Published On 2020-04-24 10:19 IST   |   Update On 2020-04-24 10:19:00 IST
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

சமையல் : இத்தனை நாள் வேலை என கூறி தப்பித்திருக்கலாம். தற்போது அது முடியாத காரியம். எனவே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சமையல் வேலைகளைக் கவனிக்கலாம். இதனால் மனைவி தினமும் சமையலறையில் எவ்வளவு கஷ்டப்பருகிறாள் என்பதை கணவர் உணர்ந்து கொள்ளலாம். மேலும் மனைவிக்கு உதவி செய்வதன் மூலம் அன்பையும், நெருக்கத்தையும் அதிகரிக்கலாம்.

விளையாட்டு : வேலை இருக்கும் போது மனைவியுடன் சேர்ந்து விளையாட நேரம் கிடைத்தாது. ஆனால் இப்போது அப்படியில்லை கிடைக்கும் நேரத்தில் மனையுடன் கேரம், செஸ் என இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். இதனால் உங்கள் மனைவிக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளது, திறமை உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். மேலும் மனதை புரிந்து கொள்ளவும் முடியும்.



உடற்பயிற்சி : வீட்டில் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யலாம். இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கும்.

தோட்டக்கலை : செடி வளர்க்கிறீர்கள் என்றால் இருவரும் இணைந்து கலை எடுத்தல், தண்ணீர் ஊற்றுதல் என செடி பராமரிப்பு வேலைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு மனைவி எப்படி வீட்டையும், தோட்டத்தையும் பராமரிக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

தம்ப்திகள் இருவரும் வேலைக்கும் போறவர்களாக இருந்தால் இந்த ஊரடங்கை தம்பதிகள்  இணைந்து பல்வேறு வீட்டு வேலைகளை செய்யவும், மனவிட்டு பேசவும், விளையாடவும், அன்பை பரிமாறி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புரிதல் ஆரோக்கியமான தம்பத்தியத்திற்கு வழிவகுக்கும். 

Similar News