லைஃப்ஸ்டைல்
பெண்கள் உடல்நலம்

தாய்மார்களின் ‘ஆரோக்கியம்’

Published On 2020-04-03 03:42 GMT   |   Update On 2020-04-03 03:42 GMT
குடும்ப நலன் மீது முழுமூச்சாக கவனம் செலுத்தும் குடும்ப தலைவிகள் தங்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் போதுமான அக்கறை கொள்வதில்லை.
குடும்ப நலன் மீது முழுமூச்சாக கவனம் செலுத்தும் குடும்ப தலைவிகள் தங்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் போதுமான அக்கறை கொள்வதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கான முயற்சியையும் அவர்கள் மேற்கொள்வதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தாய்மார்கள் நலன் சார்ந்த ஆன்லைன் நிறுவனம் ஒன்று, கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு நாடு முழுவதும் 500 பெண்களிடம் சர்வே நடத்தியுள்ளது. அவர்களின் உடல்நலன் சார்ந்த விஷயங்களை குறுந்தகவல், ஆடியோ, வீடியோ வடிவில் பதிவு செய்தது. அதில் 86 சதவீத தாய்மார்கள் கொரோனா வைரஸ் குறித்து போதுமான விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

10 பெண்களில் 7 பேர், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்திருக்கிறார்கள். 5 பேர் பயணங்களை தவிர்த்திருக்கிறார்கள். அதேவேளையில் 50 சதவீத பெண்கள் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசங்களை பயன்படுத்துகிறார்கள். 10 தாய்மார்களில் ஒருவர் மட்டுமே தங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டிருக்கிறார்கள்.

10 தாய்மார்களில் 8 பேர் உணவு பழக்கம் பற்றி அக்கறை கொண்டிருக்கிறார்கள். ஆனால் 70 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என்றும் சர்வே தகவல் தெரிவிக்கிறது. மேலும் 60 சதவீதம் பேர் தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதில்லை என்றும் கூறி இருக்கிறார்கள். 10 தாய்மார்களில் 6 பேர் தங்கள் வீட்டு உபயோக பொருட்களைத் தான் மருந்தாக பயன்படுத்துவதாக கூறி இருக்கிறார்கள். உடல் மிகவும் பல வீனம் அடைந்த நிலையில்தான் மருத்துவமனையை அணுகுகிறார்களாம்.
Tags:    

Similar News