லைஃப்ஸ்டைல்
கருச்சிதைவுக்கு பின் அபாய அறிகுறிகள்

கருச்சிதைவுக்கு பின் அபாய அறிகுறிகள்

Published On 2019-07-12 03:13 GMT   |   Update On 2019-07-12 03:13 GMT
கருச்சிதைவை தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துகொள்ளச் சிலர் மருத்துவமனையை நாடுகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்ல பயப்படுகிறார்கள்.
கருச்சிதைவுக்கு பின் அறிகுறிகள்

காய்ச்சல்
வயிற்றில் வலி
யோனியிலிருந்து கடுமையான இரத்தப்போக்கு

கருவுற்றிருந்த பெண்ணிடம் இந்த அறிகுறிகள் காணப்பட்டால் அது கருச்சிதைப்பின் விளைவாக இருக்கலாம். ஆனால் இவை கருச்சிதைவின் விளைவாகவும் இருக்கக்கூடும். கருப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்தல், இடுப்பெலும்புக்குழி அழற்சி காரணமாகவும் இருக்கலாம்.

கருச்சிதைப்பைச் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துகொள்ளச் சிலர் மருத்துவமனையை நாடுகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்ல பயப்படுகிறார்கள். அல்லது வெட்கப்படுகிறார்கள். சிலர் குறிப்பாகக் கருச்சிதைப்பு இரகசியமாகவோ, சட்டத்திற்கு மாறாகவோ செய்யப்பட்டிருந்தால் மருத்துவ உதவியை நாடுவதற்கு கூட அஞ்சுகிறார்கள்.

கடுமையாக நோயால் பாதிக்கப்படும் வரை அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லமாட்டார்கள். இந்தக் காலதாமதம் மரணம் வரை கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம். கருச்சிதைப்பைத் தொடர்ந்து கடுமையான இரத்தப்போக்கு (மாதவிலக்கில் இரத்தம் போவதை விட அதிகமாக) அல்லது தொற்று ஏற்படுதல் மிகவும் ஆபத்து. உடனே மருத்துவ உதவியை நாடுவது நல்லது.

இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் அதிர்ச்சிக்கு சிகிச்சை தரவும். தொற்று ஏற்பட்ட அறிகுறிகள் இருந்தால், குழந்தை பிறந்த பிறகு காய்ச்சலுக்கு மருந்து தருவதைப் போலவே தரவும்.
Tags:    

Similar News