லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் என்ன சாப்பிடலாம்

Published On 2019-06-26 05:04 GMT   |   Update On 2019-06-26 05:04 GMT
கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

தானியங்கள் அடங்கிய பிரெட் :

இந்த தானியங்களில் போலிக் அமிலம் அடங்கியிருக்கிறது. அதாவது போலிக் அமிலம் என்பது வைட்டமின் - பி தான். வேறு எதுவுமல்ல... இந்த முழு தானியங்கள் அடங்கிய ப்ரெட் வகைகளை ஒன்பதாவது மாத கர்ப்பிணி பெண் உண்பதால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. எனவே, ஒரு நாளைக்கு 6 முதல் 11 முறை இந்த பிரெட் வகை உணவை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

பழங்கள் :

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களுக்கு தேவையான உணவுகளுள் ஒன்று பழ வகை உணவு. இந்த பழங்கள் எல்லாவித ஊட்டச்சத்துக்களையும் தர, தாய் மற்றும் சேய் இருவருக்கும் பிரசவ காலத்திற்கு பெரிதும் உதவுகிறது. அத்துடன் பிரசவக்காலம் நெருங்க மலச்சிக்கல் பிரச்சனை என்பது அதிகமாக காணக்கூடும். அதனால் மலச்சிக்கலை போக்க பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

காய்கறிகள் :

பொதுவாக காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து அதிகமிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாக, 9-வது மாதத்தில் எண்ணெய் உணவுகளை தவிர்த்து காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் வேண்டும். இதனால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடும்.

பால் உற்பத்தி உணவுகள் :

சீஸ் மற்றும் தயிர் போன்றவற்றில் அதிகளவில் கால்சியம் மற்றும் புரதச்சத்து அடங்கியிருக்க, இது கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான சத்துக்களையும் தரவல்லது. கர்ப்பிணி பெண்கள் சோயா பால், சோயா தயிர், சோயா சீஸ் போன்றவற்றை தங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ள சர்க்கரை அளவு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
Tags:    

Similar News