லைஃப்ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள்

Published On 2019-06-18 05:03 GMT   |   Update On 2019-06-18 05:03 GMT
கர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு, அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது நல்லது.
கர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு, அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது நல்லது. ஆம், ஒரு சில உணவை நாம் வழக்கமான நாளில் எடுத்துக்கொண்டாலும், கர்ப்ப காலத்தில் தேவையற்ற ஒவ்வாமை பிரச்சனையை அது ஏற்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது.

சோயா, கோதுமை, பசு பால், முட்டை, வேர்க்கடலை, பாதாம், அக்ரூட் பருப்புகள், மீன் போன்றவை ஒருமுறை அலர்ஜி ஏற்படுத்தும்போது மீண்டும் உண்ண முயலாதீர்கள். ஆனால் ஒரு சில ஆய்வின் முடிவுப்படி தெரியவருவது என்னவென்றால், அலர்ஜி அற்ற உணவை நீங்கள் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.
 
கர்ப்ப காலத்தில் எந்த வகையான உணவுகள் என்ன பலனை தருகிறது? நச்சுக்கள் அடங்கிய உணவுகள் எவை? அவற்றை நாம் எவ்வளவு சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கும், உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது போன்ற பல விஷயங்களை பற்றி அறிவது அவசியம். இயற்கையை பாட்டிலிலும், பிளாஸ்டிக் கவரிலும் அடைத்து வைத்து பதப்படுத்தப்பட்ட உணவை உண்ணுவதில் எந்த வித பயனுமில்லை.
 
கர்ப்பிணிகளுக்குப் பால் அவசியமானது. கால்சியம் பற்றாக்குறையைச் சரிசெய்ய எல்லாருக்கும் பால் குடிக்கச் சொல்லி பரிந்துரைப்பார்கள் மருத்துவர்கள். பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் பொருட்களை உபயோகிப்பது கிருமித் தொற்றுகளுக்கும் அவை ஏற்படுத்துகிற நோய்களுக்கும் வழிவகுக்கும். பாலை எப்போதும் நன்றாகக் காய்ச்சியே குடிக்க வேண்டும்.
 
கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பதே சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். அவை கருவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.
 
வெளியிடங்களில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது. வீட்டில் செய்கிற போதும் முழுமையாக சமைக்கப்பட்டவையா எனப் பார்த்து சாப்பிட வேண்டும்.
Tags:    

Similar News