லைஃப்ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி?

Published On 2019-06-11 04:42 GMT   |   Update On 2019-06-11 04:42 GMT
கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.
கர்ப்பவதிகள் தங்களது உடல் நிலையைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக எளிமையான ஆசனங்கள் தான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சி மிகவும் முக்கியம். எல்லாவற்றையுமே, ஒரு யோகா பயிற்சியாளர் மூலம் கற்று, செய்வது நல்லது. உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், பிரசவ வலி வரும் கர்ப்ப காலத்தில் பயிற்சியாளரின் துணையுடன் எளிமையான, வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத ஆசனங்களை செய்ய வேண்டும். இக்காலகட்டத்தில் எல்லாவித பயிற்சிகளும் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு ஏற்றதில்லை என்பதால், யோகா பயிற்சியாளர் மேற்பார்வையி்ல் செய்வது நன்மை பயக்கும்.

இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை பேரிச்சம் பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சைகள், காய்ந்த சுண்டைக்காய், வெல்லம், பனங்கற்கண்டு, பாதாம், ஆட்டு ஈரல் ஆகியவற்றை உட்கொள்ளலாம். சுத்தமான, ஆரோக்கியமான சத்துணவுகளை சாப்பிட வேண்டும். தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், கீரைகள், பால், தயிர், வெண்ணெய், நெய், முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை மற்றும் முட்டை, மீன், ஆடு, கோழி இறைச்சி, ஆட்டு ஈரல் என அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடலாம். கால்சியம் அதிகரிக்க தயிர், கேழ்வரகு, கருவேப்பிலை, மணத்தக்காளி கீரை, மீன், நல்லெண்ணெய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள  வேண்டும். இதனுடன் மருத்துவர்கள் தரும் சத்து மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை தவறாமல் சாப்பிடலாம்.



கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். தசை பிணைப்புகளை சரிசெய்கிறது. முதுகுவலி மற்றும் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. உயர் இரத்த அழுத்த நிலையைக் குறைக்கிறது. சிறந்த தூக்கத்தை வழங்குகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. கர்ப்பகால நீரிழிவு நோயைத் தடுக்கிறது. சிசு பிறப்பை எளிதாக்குகிறது.

கர்ப்ப காலத்தில் உடலில் எந்த வியாதியும் இல்லாமல் இருந்தாலே சிசுவிற்கு பல மடங்கு ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல உணவு முறைகளைப் பின்பற்றினால் மட்டும் போதாது உடற்பயிற்சியும் அவசியமான ஒன்றாகும். கர்ப்ப காலத்தில யோகா செய்வதனால் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியம் பெரும்.
Tags:    

Similar News