லைஃப்ஸ்டைல்

மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் அவசியம்

Published On 2019-06-03 04:36 GMT   |   Update On 2019-06-03 04:36 GMT
பெண்கள் எவ்வாறெல்லாம் மாதவிடாய் காலத்தில் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு.
பெண்கள் அந்த நாட்களில் தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்வதும் அவசியம். இருப்பினும் சிலர் பாதுகாப்பாக இருப்பதில்லை. பெண்கள் எவ்வாறெல்லாம் மாதவிடாய் காலத்தில் அந்த மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு.

* சிலர் ஒரு பேடையே ஒரு நாள் முழுவதும் பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு நான்கு அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை பேடை மாற்றுவது அவசியம். குறைவான இரத்தப்போக்கு நாட்களிலும் அவ்வாறு மாற்றுவது அவசியம். பயன்படுத்தப்பட்ட பேடை பாலிதீன் பைகளில் கட்டி குப்பைத் தொட்டியில் போடுவதும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.

* இரத்தப்போக்கு வரும் பகுதியை சுத்தமாகக் கழுவுவது அவசியம். அங்கு வெதுவெதுப்பான நீரால் சுத்தம் செய்துக் கழுவினால் வலி சற்று குறையும். இரத்தப் போக்கும் சீராக வரும்.

* இரத்தப் போக்கு வரும் இடத்தை சுத்தமாகக் கழுவுகிறேன் என்ற பெயரில் சோப்பு, வாசனைக் கலந்த கெமிக்கல் திரவியங்களைப் பயன்படுத்தாதீர்கள். அது வெஜினாவின் வழியாக உள்ளே சென்று பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம். உடலே அதன் அசுத்தத்தை சுத்தப்படுத்திக் கொள்ள இயற்கை முறையைக் கையாளும். நீங்கள் வெறும் வெதுவெதுப்பான நீரால் கழுவுவதே போதுமானது.



* பேட் மாற்றுவது போல் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் டவலைக் கூட சுத்தமாகப் பயன்படுத்துவது அவசியம். வெஜினா போன்ற இடங்களைத் துடைக்கும்போது டவல் மூலமாக கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தினமும் துடைப்பதற்கு துவைத்த, சுத்தமான டவலைப் பயன்படுத்துங்கள்.

* அந்த மூன்று நாட்கள் பயன்படுத்திய ஆடைகளை சுத்தமாக துவைத்துப் பயன்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளை நன்கு வாஷ் செய்து வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். நன்கு வெயில் படும்படி காய வையுங்கள். முடிந்தால் டெட்டால் பயன்படுத்தி அலசலாம்.

* கைகளை பேட் மாற்றுவதற்கு முன்னும், பின்னும் சுத்தமாகக் கழுவுவது அவசியம். உங்கள் கைகளில் இருக்கும் பாக்டீரியாவால் தொற்றுகள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

Tags:    

Similar News