பெண்கள் உலகம்

பெண்களின் ‘பிரா‘ பற்றிய சந்தேகங்களும் - தீர்வும்

Published On 2019-03-07 13:23 IST   |   Update On 2019-03-07 13:23:00 IST
பெண்கள் சரியான அளவு பிராவை தேர்வு செய்யாமல் அணிந்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். அப்படிபட்டவர்களுக்கு, இந்த கேள்விகளும், பதில்களும் நல்ல தீர்வை தரும்!
பெண்களில் பலருக்கு `பிரா’ பற்றிய சந்தேகங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. சரியான அளவை தேர்வு செய்யாமல் பிராவை அணிந்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

அப்படிபட்டவர்களுக்கு, இந்த கேள்விகளும், பதில்களும் நல்ல தீர்வை தரும்!

கேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பதில் : உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ரா பதிந்த இடங்கள் சிவந்துபோய் காணபட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்துகொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ரா ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பதுபோல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.

கேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?

பதில் : தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.

கேள்வி: குண்டாக 36 சைஸ் உள்ளவர்கள் எலாஸ்டிக் ஸ்ட்ரா வைத்த பிரா அணியலாமா?

பதில் : அணியக்கூடாது. மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழிவகுக்கும்.

கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா?

பதில் : தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிராசைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.

கேள்வி: கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா?

பதில் : இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணியலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை கலர் பிராக்களை அணிந்து அழகு பார்க்கலாம்.

கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா?

பதில் : பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தை பொறுத்ததுதான். 34 இஞ்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதைவிட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்துபோய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிபட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை. கர்ப்பிணி பெண்களும் தாய்பால் கொடுபவர்களும் அதற்குரிய பிராக்களை அணிந்து மார்பழகை பாதுகாக்க வேண்டும்.

Similar News