லைஃப்ஸ்டைல்

பெண்களின் இந்த செயல்கள் முன்னழகை பாதிக்கும்

Published On 2016-08-30 07:35 GMT   |   Update On 2016-08-30 07:35 GMT
பெண்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் சில செயல்கள் அவர்களின் முன்னழகை (மார்பகம்) பாதிக்கும்.
பெண்கள், செக்ஸியான தோற்றம் அடைய அல்லது வேறு சில காரணங்களுக்காக தங்கள் மார்பகங்களுக்கு செய்யும் சில காரியங்கள் அவர்களுக்கே தெரியாமல் தீங்காக அமைகிறது. இந்த தவறுகளை உள்ளாடை அணிவதில் இருந்து, அவர்களது தாம்பத்திய உறவு வரை பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் செய்கின்றனர்.

வெறும் உடல் மேல், வாசனை திரவியங்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டாம். பெரும்பாலான வாசனை திரவியங்கள் இரசாயனங்களால் தான் தயாரிக்கப்படுகின்றன. மார்பக சருமம் மிகவும் மென்மையானது, இதனால், உண்டாகும் தாக்கம் சரும பிரச்சனைகள் உண்டாக காரணியாக அமையலாம்.

சன்பாத் எனும் சூரிய குளியலில் ஈடுபடும் போது அதிக நேரம் சூரிய ஒளி மார்பில் படும்படி இருக்க வேண்டாம் என கூறப்படுகிறது. சூரியனின் புற ஊதா கதிர்கள் மார்பக புற்றுநோய் உண்டாக காரணியாகலாம். மேலும், இந்த செயல், மார்பக தோல் நெகிழ்வற்ற நிலை அடையலாம்.

பாத்டப்பில் குளிக்கும் பெண்கள் அதிக நேர சூடான நீரில் குளிக்க வேண்டாம் என கூறப்படுகிறது,.இது மார்பக பகுதி சருமத்தை வறட்சியடைய செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் மார்பகம் தோல் நெகிழ்வற்ற (Inelastic) நிலையடையலாம்.

பெண்களில் சிலர் சிறிய பிரா அணிவதால் செக்ஸியான தோற்றம் அளிக்கலாம் என எண்ணுகின்றனர். ஆனால், இது தவறு. இறுக்கமான முறையில் பிரா அணிவதால் இரத்த ஓட்டம் தடைப்படவும், மார்பக பகுதியில் இருக்கும் தசைகளில் பாதிப்பு உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

திடீரென உடல் எடை அதிகரித்தல், அல்லது சரியான உடற்பயிற்சி செய்யாமல் வெறும் டயட்டால் அதிக உடல் எடையை குறைதல் போன்றவை பெண்கள் மார்பகங்கள் தொங்கும் படியான அல்லது அசௌகரியமான நிலை அடையவோ காரணமாகிவிடும். எனவே, உடல் பருமனாக இருக்கும் பெண்கள் சரியான உடற்பயிற்சியின் மூலமாக உடல் எடையை குறைக்க வேண்டியது அவசியம்.

Similar News