பெண்கள் உலகம்

மாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்

Published On 2016-06-01 11:32 IST   |   Update On 2016-06-01 11:32:00 IST
வயதுக்கு வந்த பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
வயதுக்கு வந்த பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பொதுவாக 28-35 நாட்களுக்குள் மாதந்தோறும் மாதவிடாய் வருகிறது என்றால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

அதுவும் 40 நாட்களுக்கு மேல் அல்லது வராமல் நின்று விடுகிறது என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
ஒரு சில காரணங்களால் மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போக கூடும். அதிக மன அழுத்தம் காரணமாக ஹார்மோனில் சுரப்பு குறைகிறது, இதனால் கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது தாமதம் ஆவதால் மாதவிடாய் தடைபடுகிறது.

திடீரென உடல்நிலை சரியில்லாமல் போதல் அல்லது ஏதேனும் நோயின் வெளிப்பாடாக கூட மாதவிடாய் தள்ளி போகலாம்.

பகல் ஷிப்ட், இரவு ஷிப்ட் என்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும்.

நீங்கள் மருந்து ஏதேனும் உட்கொண்டு வந்தால், அதன் பக்கவிளைவாக கூடவும் மாதவிடாய் தள்ளி போகலாம், ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது நர்ஸிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும். சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றன.

அளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும்.

Similar News