பெண்கள் உலகம்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

Published On 2016-04-30 11:38 IST   |   Update On 2016-04-30 11:38:00 IST
கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பிறந்த குழந்தைக்கு ஒரே உணவு தாய்ப்பால் தான். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த உணவுகளை உட்கொண்டாலும், அது தாய்ப்பாலுடன் கலந்து குழந்தையை அடையும்.

எனவே உங்கள் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டுமானால், தாய்ப்பால் கொடுப்பவர்கள் தங்களது உணவுகளில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். அதிலும் இது கோடைக்காலம். இக்காலத்தில் உடலை நீர்ச்சத்துடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்களை அதிகம் சாப்பிட தோன்றும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.

சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃப்ளேவர் தாய்ப்பாலில் கலந்து, குழந்தைக்கு வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தாய்ப்பால் கொடுக்கும் போது ஸ்ட்ராபெர்ரி பழத்தை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், குழந்தைக்கு தீவிரமாக அழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, எரிச்சல் போன்றவையும், சில நேரங்களில் சருமத்தில் அரிப்புக்களும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அன்னாசியில் உள்ள அசிட்டிக் தன்மை, தாய்ப்பாலுடன் கலந்தால், அது தாய்ப்பாலை நாற்றமிக்கதாக மாற்றுவதோடு, குழந்தைக்கு நாப்கின் அரிப்புக்களையும் உண்டாக்கும்.

கிவி பழத்தை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குழந்தைக்கு ஆரோக்கியமானதல்ல. இப்பழத்தில் உள்ள உட்பொருட்கள் குழந்தைக்கு வாய்வுத் தொல்லையை உண்டாக்கும்.

செர்ரிப் பழங்களை அதிகமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் இயற்கையாகவே மளமிளக்கும் தன்மை உள்ளது. ஒரு வேளை அதிகமாக உட்கொண்டால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

Similar News