லைஃப்ஸ்டைல்

கர்ப்பகால சர்க்கரை நோய்க்கு சாப்பிட வேண்டியவை

Published On 2016-04-26 06:01 GMT   |   Update On 2016-04-26 06:01 GMT
கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான்.
கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான். இதற்கு காரணம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடும் உண்ணும் உணவுகளும்தான். கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதிக்கு அதற்கு 'ஜெஸ்டேஸனல் டயபட்டிஸ்' என்று பெயர்.

பால், காபி போன்றவைகளில் அதிகம் சீனி சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இடைப்பட்ட நேரங்களில் மோருடன் வெள்ளரி, மாங்காய் அல்லது காய்கறி சூப் சாப்பிடலாம். ரத்தத்தில் கட்டுப்பாட்டில் இருந்தால், காய்கறி சூப்புடன் ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, தார்பூசணி, பேரிக்காய் முதலிய பழங்களை கையளவு சேர்த்துக் கொள்ளலாம்.

மதிய உணவுக்கு எண்ணெயில் பொரித்தவற்றை தவிர்ப்பதுடன், தேங்காய் சேர்க்காத சமையலாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், சர்க்கரை, பேரீச்சம்பழம், மாம்பழம், சீதாப்பழம், வாழைப்பழம், அப்பம், இடியப்பம், புட்டு, கஞ்சி, களி, கூழ், மைதாவில் செய்த பிரெட், பூரி, பரோட்டா,

சேமியா, பொங்கல், கிழங்கு வகைகள், கரட், பீட்ரூட், வாழைக்காய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி கருவாடு... இவையனைத்தையும் கட்டாயமாக தவிர்த்துவிட வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால் சிறிதளவு கோழிக்கறி சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். தினசரி 2,200 கலோரிகள் அளவுள்ள உணவுகளை சரிவிகித அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

முப்பத்தி ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பம் தரித்த காலத்திலிருந்தே மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு இருபது நிமிடங்கள் வாங்கிங் செல்ல வேண்டுமாம்.

Similar News