பெண்கள் உலகம்

பெண்கள் வீட்டில் உள்ள மரச்சாமான்களை பத்திரமாக பாதுகாக்க வழிகள்...

Published On 2023-04-15 09:36 IST   |   Update On 2023-04-15 09:36:00 IST
  • நீண்ட நாட்கள் உழைக்கும் நல்ல தரமான மர சாமான்களை பார்த்து வாங்க வேண்டும்.
  • மர சாமான்களை அதிகமாக பாதிப்புக்குள்ளாக்குவது கரையான்களே.

அனைத்து வீடுகளிலும் மரச்சாமான்கள் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வீட்டின் அமைப்புக்கு ஏற்றவாறு அழகழகாக மரச்சாமான்கள் உபயோகிக்கப்படுகிறது. ட்ரெஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள், சேர், சோபா, நாற்காலிகள், கட்டில், பீரோ சமையலறையில் வைக்கப்படும் அலமாரிகள் என பலவிதமான மரச்சாமான்கள் நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது.

நீண்ட நாட்கள் உழைக்கும் நல்ல தரமான மர சாமான்களை பார்த்து வாங்க வேண்டும். இவ்வகை மரச்சாமான்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது அவசியம்.

மரச்சாமான்களின் மேல் தூசிகள் கீறல்கள் படாத வண்ணம் நல்ல அழகான துணிகளை அதன் மீது விரித்து அலங்கரிக்கலாம். தூசிகளை துடைக்கும் போது மென்மையான துணிகளை உபயோகப்படுத்த வேண்டும். கரடு முரடான பொருள்களை பயன்படுத்தி சுத்தம் செய்தல் கூடாது.

சோப்பு நீர் உபயோகித்து மெல்லிய இதமான துணியால் தூசிகளை துடைக்க வேண்டும். வெயிலில் அதிக நேரம் மரச்சாமான்களை உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டின் உள்ளே 30 முதல் 45° ஈர பதமும் 60 முதல் 80 டிகிரி வரை உள்ள வெப்பநிலையும் மரச்சாமான்களுக்கு சாதகமான ஒன்றாகும். அதற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

சூடான பாத்திரங்களை டைனிங் டேபிள் மேல் வைக்கும் போது அதற்கான விரிப்புகளை உபயோகிக்க வேண்டும். மரச்சாமான்களின் மீது கறைகள் படும்போது கத்தி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி அழுந்த துடைக்க வேண்டும். பின்பு நன்கு காய விட்டு அதன் மேல் வாக்ஸ் அல்லது வார்னிஷ் கொண்டு பாலிஷ் செய்ய வேணும். அதிகபட்சமான வெயிலில் உலர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

ஃபோல்டிங் சாமான்களை தகுந்த முறையில் கையாள வேண்டும் . எண்ணெய் மற்றும் வார்னிஷ் உபயோகிப்பதால் மரசாமான்கள் பளபளப்பாகவும் சீராகவும் அதிக நாட்கள் வரை பாதுகாப்பாக இருக்கும் .

நாற்காலிகள் மீது ஈரத் துணிகளை காய வைப்பது தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கிருமிகள் அதில் அடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இவ்வித மர சாமான்களை அதிகமாக பாதிப்புக்குள்ளாக்குவது கரையான்களே. மரச்சாமான்கள் மீது ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கரையான்கள் அரிக்க வாய்ப்புள்ளது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் இந்த கரையான்களின் பாதிப்பு மர சாமான்களின் மீது அதிகமாக இருக்கும்.

நாற்காலிகள் கட்டில் கதவுகள் மீது கரையான்கள் அரிக்காத வண்ணம் மிக கவனமாக பாதுகாக்க வேண்டும். அதற்கான தற்காப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.

இதுபோன்று எல்லா அறைகளில் உள்ள மரச்சாமான்களையும் பாதுகாப்பான முறையில் உபயோகித்தால் நீண்ட நாட்கள் உழைக்கும். நல்ல உயர்ந்த தரமான மரத்தால் செய்த பொருள்களை வாங்குவதும் நீண்ட காலம் உழைக்க ஏற்றவையாக இருக்கும்.

Tags:    

Similar News