பெண்கள் உலகம்
null

மாதவிடாய் நிற்கும் பொதுவான வயது எது?

Published On 2022-06-24 04:28 GMT   |   Update On 2022-06-24 04:29 GMT
  • மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.

குறிப்பிட்ட வயதை கடந்த பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை அனுபவிப்பார்கள். மெனோபாஸ் என்பது ஒரு வருடத்திற்கு மாதவிடாய் வருவதில் மாறுபாடு ஏற்பட்டு படிப்படியாக குறையும் என வரையறுக்கப்படுகிறது. இது பொதுவாக பெண்களின் 40களின் பிற்பகுதியில் அல்லது 50களின் முற்பகுதியில் நிகழும்.

மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் அறிகுறிகளுள் எடை அதிகரிப்பு அல்லது பெண்ணுறுப்பு வறட்சி ஆகியவை அடங்கும். சரி, இந்த மெனோபாஸ் குறித்து பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

மாதவிடாய் நிற்பதற்கான (மெனோபாஸ்) சராசரி வயது 51 என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் ஏற்படுவது படிப்படியாக நிற்கிறது. கருப்பை செயல்பாடு குறைவதற்கான ஆரம்ப நிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சில பெண்களுக்கு தொடங்கலாம். மற்றவர்கள் 50 வயதிற்கு பிறகும் மாதவிடாய் காலத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். ஹாட் ஃப்ளாஷ் எனப்படும் அதிகப்படியான காய்ச்சல் வெப்பத்தின் திடீர் உணர்வு என்பது மாதவிடாய் நிற்கும் பெண்கள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகளாகும். பகலில் அல்லது இரவில் இதுபோன்ற உணர்வு ஏற்படலாம். சில பெண்கள் தசை மற்றும் மூட்டு வலியை அனுபவிப்பார்கள். இது ஆர்த்ரால்ஜியா அல்லது மனநிலை மாற்றங்கள் (mood swing) என்று அழைக்கப்படுகிறது.

Tags:    

Similar News