பெண்கள் உலகம்

இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஹீமோகுளோபின் பிரச்சனையும்... உணவும்...

Published On 2023-02-01 04:17 GMT   |   Update On 2023-02-01 04:17 GMT
  • பெண்கள் ஹீமோகுளோபின் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.
  • இந்த பிரச்சினையை தீர்க்க உதவும் உணவு வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

பெண்கள், குறிப்பாக இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினை அவர்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவது தான். இந்த பிரச்சினையை தீர்க்க உதவும் உணவு வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

பேரீச்சை பழம் - தினம் ஐந்து

முருங்கை கீரை - வாரம் 2 முறை

பீட்ரூட் ஜூஸ் - 60 மி.லி., வாரம் இருமுறை

சுண்டைக்காய் - வாரம் 2 முறை

வேகவைத்த சிவப்பு சுண்டல் - தினமும்

வேகவைத்த பாசிப்பயறு - வாரம் 2 முறை

கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை -இவைகளில் ஏதாவது ஒன்று தினமும்

கருப்பு திராட்சை - வாரம் 2 முறை

ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை - தினமும் 4

பீர்க்கங்காய் - வாரம் 2 முறை

நெல்லிக்காய் - தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம்.

கறிவேப்பிலை சாதம் - வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.

கறிவேப்பிலை ஒரு கை பிடி, 2 நெல்லிக்காய் இவைகளை ஜூஸ் போட்டு குடிக்கலாம்.

மாதுளம்பழம், செவ்வாழைப்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள் சாப்பிடலாம்.

கரிசலாங்கண்ணி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, அரை கீரை, தண்டுக்கீரை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,

மின்னஞ்சல்: doctor@dt.co.in,

வாட்ஸ் அப்: 7824044499

Tags:    

Similar News