அழகுக் குறிப்புகள்

பெண்களின் முகம், சருமத்தில் தேவையற்ற முடிகளின் வளர்ச்சியா?

Published On 2023-03-01 05:17 GMT   |   Update On 2023-03-01 05:17 GMT
  • லேசர் சிகிச்சை என்பது என்னவென்று பலருக்கு தெரியவில்லை.
  • நமது வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

நமது தினசரி உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை, நவீன தொழில்நுட்பங்கள் முதலியவை பலவிதமான தீமைகளை விளைவிக்கின்றது. இன்று பெரும்பாலான பெண்களின் முகம் மற்றும் சருமத்தில் அதிக முடிவளர்ச்சியோடு காணப்படுவதால், சமுதாயத்தில் தன்னம்பிக்கையை அவர்கள் இழந்து தங்களது சுயதிறமைகளை வெளியுலகத்திற்கு வெளிப்படுத்த இயலாமல் பின்னிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய முடிவளர்ச்சி ஹார்மோன் ஏற்றத்தாழ்வினால் தேவையற்ற முடிவளர்ச்சி பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனை தடுக்கலாமா?, குறைக்கலாமா? என்று சந்தேகமும், அச்சமும் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆம்! நிச்சயமாக இதிலிருந்து ஒரு விடுதலை பெறமுடியும். டயோட் லேசர் சிகிச்சை எனப்படும் நவீன தொழில்நுட்பம் வாயிலாக தேவையற்ற முடியை அகற்ற முடியும்.

லேசர் சிகிச்சை என்பது என்னவென்று பலருக்கு தெரியவில்லை. இந்த லேசர் கதிர் என்பது சருமத்தில் உள்ள மெலானின் எனப்படும் குறிப்பிட்ட க்ரோமாபோரிளை தாக்கி அதனை செயலிழக்க செய்கிறது. இதனால் முடிவளர்ச்சி மற்றும் புதிய முடி வளர்வதில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் சாதாரண திசுக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதனை எத்தனை அமர்வுகளில் சரி செய்யலாம் என பலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம். அது ஒவ்வொருவருக்கும் முடியின் தடிமனை பொருத்து வேறுபடலாம். சிலருக்கு 6 அமர்வுகளும், சிலருக்கு அதற்கு மேலும் மாறுபடலாம். சிகிச்சையின் நிறைவில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு நம் முடி வளர்ச்சியை கட்டுப்படுத்த நிச்சயமாக இயலும்.

அதே சமயம் நமது ஹார்மோன் குறைபாடுகளை மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்று சீராக கொண்டு செல்வது மிக இன்றியமையாதது. நமது வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவே உடல் நலத்திற்கு சிறந்தது என ஜெருஷ் மருத்துவமனை டாக்டர் பிளாட்பின் தெரிவித்தார்.

டாக்டர் பிளாட்பின், பெனிலா பிளாட்பின்

Tags:    

Similar News