அழகுக் குறிப்புகள்

முகத்தில் உள்ள கருவளையத்தை நீக்க எளிய வழி...!

Published On 2023-12-22 15:20 IST   |   Update On 2023-12-22 15:20:00 IST
  • முகம் பொலிவிழந்து முதுமையான தோற்றம் போன்று காட்சியளிக்கும்.
  • கருவளையத்தை போக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம்.

பெண்களுக்கும், ஆண்களுக்கும் இருக்கும் பெரும் பிரச்சினைகளில் ஒன்று கண்ணிற்கு கீழ் கருவளையம் வருவது தான். கருவளையம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக அதிகநேரம் தூங்காமல் இருப்பதனால் தான் கருவளையம் வருகிறது.

கருவளையம் வந்துவிட்டால் முகம் பொலிவிழந்து முதுமையான தோற்றம் போன்று காட்சியளிக்கும். எனவே, கருவளையத்தை போக்க பல்வேறு இயற்கை குறிப்புகள் உள்ளது.

பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் டி, ஏ, ஈ, மெக்னீசியம், கொழுப்பு அமிலங்கள் நம்முடைய சருமத்திற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கிறது. எனவே கருவளையத்தை போக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம்.

 கருவளையம் உள்ளவர்கள் தினமும் இரவு தூங்கும் முன்பு பாதம் எண்ணெயை சில துளிகள் கையில் எடுத்துக்கொண்டு கருவளையம் உள்ள இடத்தில மசாஜ் செய்ய வேண்டும். கருவளையம் உள்ள இடத்தில் மட்டுமில்லாமல் முகத்தின் எல்லா பகுதிகளிலும் மசாஜ் செய்யலாம். மறுநாள் காலையில் தண்ணீரை கொண்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கருவளையம் விரைவில் மறைந்துவிடும்.

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவில் ரோஸ் வாட்டர் மற்றும் பாதாம் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். இவற்றை நன்றாக கலந்து முகத்தில் கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு, 10 நிமிடம் கழித்து தண்ணீரை கொண்டு கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முகம் பொலிவாக இருப்பதுடன் கருவளையமும் எளிதில் நீங்கிவிடும்.

தினமும் இரவில் தூங்கும் முன்பு, பால் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து கருவளையம் உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் விரைவில் நீங்கிவிடும்.

அதுமட்டுமல்லாமல், பால் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து முகத்தில் பேஸ் பேக்காகவும் போடலாம். இம்முறையை நீங்கள் செய்வதன் மூலம் முகம் பொலிவாக இருப்பதுடன் இளமையான தோற்றத்தையும் அளிக்கும்.

Tags:    

Similar News