இயற்கை அழகு
null

முக அழகுக்கு உதவும் இம்பிளான்ட் நிரந்தர பற்கள்

Update: 2023-03-27 08:20 GMT
  • பல் கட்டுவதிலும் கம்ப்யூட்டரின் உதவியுடன் செய்யக்கூடிய நவீன முறைகள் உள்ளன.
  • ஈறு நோய் உள்ளவர்கள் அனைத்து வயதிலும் இருப்பார்கள்.

மதுரையை சேர்ந்த நளா பல் மருத்துவமனை டாக்டர் ஜெ.கண்ணபெருமான் கூறியதாவது:-

உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ளத்தில் தன்னம்பிக்கைக்கும் பற்களின் ஆரோக்கியம் மிக அவசியம். வாய் தான் உடலின் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. சர்க்கரை நோய், ரத்தசோகை, வயிறு மற்றும் குடல் பிரச்சினைகள் போன்ற பல உடல் உபாதைகளை வாயின் ஆரோக்கியத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதே போல் உடலுக்கு பற்களின் தேவை பல பரிமாணங்களில் இருக்கும். உணவை நன்றாக சாப்பிடுவதற்கு, தடையின்றி பேசுவதற்கு, அழகாக சிரிப்பதற்கு என பற்களின் பயன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இம்பிளான்ட் நிரந்தர பற்கள்

இம்பிளான்ட் என்பது டைட்டானியம் என்னும் உலோகத்தால் ஆனது. இது பற்களின் வேர் பகுதிக்கு பதிலாக செயலாற்றக்கூடியது. . இம்பிளான்ட் பொருத்துவதால் மற்ற பற்களுக்கோ உடலுக்கோ எந்த விதமான பக்கவிளைவுகளும் வராது. இம்பிளான்ட் பொருத்தி அதன் மேல் நிரந்தர பற்கள் கட்டுவதன் மூலம் இயற்கை பற்கள் போன்ற பலமான பற்களை பெறலாம்.

யார் செய்து கொள்ளலாம்?

இம்பிளான்ட் நிரந்தர பல் கட்டும் சிகிச்சை வயதானவர்களுக்கு தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் பல் கட்ட வேண்டிய தேவை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

இளம் வயதினருக்கு முக அழகிற்கும் சிரிப்பிற்கும் தேவைப்படும். அலுவலகம் செல்பவர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு சரியாக பேசுவதற்கு தேவைப்படும். வயதானவர்களுக்கு நன்றாக சாப்பிட தேவைப்படும். இதில் எது குறைந்தாலும் வாழ்க்கை முறையில் பல அசவுகரியங்களை சந்திக்க நேரிடும்.

சொத்தை பற்கள், ஆடும் பற்கள், விளையாடும் பொழுதோ அல்லது கீழே விழுந்தோ உடையும் பற்கள் என பல விதமான சூழ்நிலையில் பல் கட்டும் சிகிச்சை தேவைப்படும். ஈறு நோய் உள்ளவர்கள் அனைத்து வயதிலும் இருப்பார்கள். ஈறு நோயால் வலி வராது. ஆனால் மெதுவாக பரவி பற்களை ஆட செய்து விடும். இது ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வரும். மரபு வழியாகவோ அல்லது வாழ்க்கை முறை மற்றும் சரியான கவனிப்பு இல்லாததால் பலருக்கும் ஈறு நோய் மற்றும் பற்களில் பாதிப்பு வருகிறது. எனவே எந்த வயதிலும் பற்களின் தேவை உள்ளவர்கள் இம்பிளான்ட் பற்கள் பொருத்தும் சிகிச்சையை செய்து கொள்ளலாம்.

பல் பிரச்சினை காரணமாக பல் செட் போட்டுகொண்டு சாப்பிட அவதிப்படுவார்கள், பொது இடங்களில் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் சங்கடப்படுவார்கள். ஒரு சில பற்கள் முதல் பற்களே இல்லாதவர்கள் என எல்லா தரப்பினரும் எந்த தயக்கமுமின்றி இம்பிளான்ட் நிரந்தர பற்கள் பொருத்தும் சிகிச்சை செய்து கொள்ளலாம்.

இம்பிளான்ட் சிகிச்சையின் நவீன புரட்சி

இன்றைய நவீன சிகிச்சை முறையில் ஐரோப்பிய இம்பிளான்ட்கள் மிகவும் முக்கியமானதாகும். எலும்பு தேய்ந்து போனதால் நிரந்தர பல் கட்ட முடியாமல் பல் செட் போடுபவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இம்பிளான்ட்கள் உள்ளன. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, இருதய நோய், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு சிகிச்சை முறையில் சில மாற்றங்களை செய்தால் எந்த தடையுமின்றி இவர்கள் அனைவரும் இம்பிளான்ட் சிகிச்சையின் மூலம் நிரந்தர பற்கள் பெறலாம்.

பல் கட்டுவதிலும் கம்ப்யூட்டரின் உதவியுடன் செய்யக்கூடிய நவீன முறைகள் உள்ளன. பற்களின் அளவை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் நிரந்தர பற்களை நம் வாய்க்கேற்ப துல்லியமாக வடிவமைத்து கொடுத்துவிடும். அதேபோல் கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்படும் நிரந்தர பற்கள் செராமிக் மற்றும் ஜிர்க்கோனியா போன்ற அதி நவீன பொருட்களால் செய்யப்படுகின்றன. இவை மிக லேசானதாகவும் அதே சமயம் அதிக பலம் உள்ளதாகவும் இருக்கும். எனவே பல் கட்டிய உணர்வே இல்லாமல் இயற்கை பற்கள் போலவே இருக்கும்.

இம்பிளான்ட் நிரந்தர பற்கள் பொருத்தியவர்கள் விரும்பியதை சாப்பிட முடியும். மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியும். இதனால் உடலின் ஆரோக்கியம் வெகுவாக முன்னேறும். அதே போல் பேசுவது, சிரிப்பது அனைத்திலும் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ஒன்றிணைந்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News