இயற்கை அழகு

பெண்களை கவரும் வகையில் கைப்பை தயாரிப்பது எப்படி?

Update: 2022-08-02 07:32 GMT
  • கைப்பைகள் பெண்களை அதிகளவில் கவரும்.
  • கைப்பை இன்றி வெளியே செல்லும் பெண்களை காண்பது அரிது.

பெண்கள் எங்கே வெளியே சென்றாலும் அவர்கள் கைப்பையுடன் தான் செல்வார்கள். கைப்பை இன்றி வெளியே செல்லும் பெண்களை காண்பது அரிது. அந்த அளவுக்கு பெண்களுக்கு பிடித்த பொருட்களில் ஒன்று கைப்பை. இதில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கைப்பைகளை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும், ஒவ்வொரு வடிவத்திலும், கண்களை கவரும் வகையிலும், பல்வேறு வண்ணங்களிலும் வைத்திருப்பார்கள்.

இப்படிப்பட்ட கைப்பை நமது நாட்டு பெண்களிடம் காலம் காலமாக இருந்து வரும் ஒன்று. இவற்றை மொத்தமாக ஆர்டர் செய்து, அதில் சில அலங்காரங்களை செய்து, அதனை பெண்களை கவரும் வகையில் அழகுப்படுத்தி விற்பனை செய்யலாம். இதற்கு கைப்பை, கிளிட்டர் கலர், மார்க்கர் பேனா, குந்தன் கல், பிளாஸ்டிக் போன்ற கவர்ச்சியான பலவகை பூக்கள் போன்ற பொருட்கள் தேவை.

உங்களுக்கு விருப்பமான, உங்களால் வரைய முடிந்த பூக்கள் படத்தை மார்க்கர் பேனாவால் கைப்பையில் வரையுங்கள். அது செடி ஒன்றில் நிறைய சிறிய பூக்களும், பெரிய பூ ஒன்றும் இருப்பது போல வரைந்து கொள்ளவும். அவ்வாறு படம் வரைய தெரியாது என்றாலும் கவலையில்லை. ஒரு டிரேஸ் பேப்பர் மூலம் படம் ஏதாவது வரைந்து கொள்ளவும். பின்னர் படத்தின் மீது கிளிட்டர் கொடுக்கவும். பின்னர் சிறிய பூக்கள் மீது குந்தன் கல் வைத்து நன்கு ஒட்டவும். பிறகு நீங்கள் வரைந்துள்ள பூக்கள் மீது அழகாக ஒட்டவும்.

அதே போல பெரிய மீது ஜிமிக்கி வைத்து நெருக்கமாக ஒட்டவும். இதனையும் நீங்கள் வரைந்து வைத்துள்ள படத்தில் வசதியாக ஒட்டவும். அதில் இலைகள் வரைந்துள்ள பகுதியில் பச்சை நிற வண்ணம் பூசவும். இதே போல பிளாஸ்டிக்கால் ஆன பட்டாம்பூச்சி ஒன்றை பூக்களின் மீது பறக்கிற மாதிரி ஒட்டலாம். இவை பார்ப்பதற்கு அழகாகவும், அனைவரையும் கவரும் விதமாகவும் இருக்கும். இது போன்ற கைப்பைகள் பெண்களை அதிகளவில் கவரும். அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கும்.

Tags:    

Similar News