இயற்கை அழகு
பால் குளியல்

பால் குளியல் தரும் நன்மைகள்

Update: 2022-04-27 02:40 GMT
குறிப்பிட்ட கால இடைவெளியில் பால் குளியல் போடுவது கரும்புள்ளிகள் மற்றும் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை மேம்படுத்த உதவும் என்ற கருத்து நிலவுகிறது.
சருமம் உரிதல்: பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. உடலில் இருந்து இறந்த செல்களை நீக்குவதற்கு பாலில் இருந்து தயாரிக்கப்படும் மோரை அதிகம் பயன்படுத்தலாம். அத்தகைய ஈரப்பதத் துடன் இறந்த செல்களை நீக்குவதால் சருமத்தில் பளபளப்பை தக்கவைத்துக்கொள்ளலாம்.

பாலை பருகுவதோடு சரும அழகை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பாலில் உள்ள கொழுப்புகள் சருமத்தில் படர்ந்திருக்கும் எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு உதவும்.

அதில் காணப்படும் லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு துணைபுரியும். பால் குளியல் உடலையும், மனதையும் தளர்வாக்கும். சருமத்தை புத்துணர்ச்சி அடையச்செய்யும். பல்வேறு உளவியல் நன்மைகளையும் வழங்கும்.

அழற்சி: பால் குளியலானது சரும வறட்சி, தோல் தடிப்பு, தோல் அழற்சி, அரிப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்று நம்பப் படுகிறது. இருப்பினும் அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்படவில்லை. ஆகையால் ஏதேனும் தோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் சரும மருத்துவரை அணுகுவது நல்லது.

வெயிலுக்கு இதமளிக்கும்: பால் குளியல் சருமத்திற்கு ஊட்டமளிக்கக்கூடியது. சூரிய கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும பாதிப்புகளை சரி செய்ய உதவும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பால் குளியல் போடுவது கரும்புள்ளிகள் மற்றும் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை மேம்படுத்த உதவும் என்ற கருத்து நிலவுகிறது.
Tags:    

Similar News