இயற்கை அழகு
குங்குமப்பூ மாய்ஸ்சுரைசர்

புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் மாய்ஸ்சுரைசர்

Update: 2022-03-22 08:20 GMT
குங்குமப்பூ, வெயிலால் ஏற்படும் சிறு சிறு கட்டிகளை குணமாக்கும், சரும சுருக்கங்களை நீக்கும். மேலும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

தேவையான பொருட்கள்

குங்குமப்பூ - 1 தேக்கரண்டி
பன்னீரில் ஊறவைத்த பாதாம் - 4
கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
கிளிசரின் - 1 தேக்கரண்டி
வைட்டமின் ஈ எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி, சிறிது பன்னீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் கற்றாழை ஜெல், குங்குமப்பூ, வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் கிளிசரின் சேர்த்துக் கலந்து ஒரு சிறிய கண்ணாடி குமிழில் வைக்கவும்.

இந்த மாய்ஸ்சுரைசரை தினமும் போட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக தீரும்.

குங்குமப்பூ, வெயிலால் ஏற்படும் சிறு சிறு கட்டிகளை குணமாக்கும், சரும சுருக்கங்களை நீக்கும். மேலும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். கிளிசரின் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க முக்கியப் பங்காற்றும்.
Tags:    

Similar News