லைஃப்ஸ்டைல்
உஷ்ணத்தால் சருமம் பாதிக்காமல் இருக்க...

உஷ்ணத்தால் சருமம் பாதிக்காமல் இருக்க...

Published On 2021-04-21 07:33 GMT   |   Update On 2021-04-21 07:33 GMT
உஷ்ணத்தால் சருமம் பாதிக்காமல் இருக்க அதன் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வது மிக அவசியம். அதற்கு, சருமத்திற்கு பொருத்தமான கிளன்சரை பயன்படுத்தவேண்டும்.
உஷ்ணத்தால் சருமம் பாதிக்காமல் இருக்க அதன் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வது மிக அவசியம். அதற்கு, சருமத்திற்கு பொருத்தமான கிளன்சரை பயன்படுத்தவேண்டும். அதனை பயன்படுத்தி சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள், முகப்பரு போன்ற அடிப்படை சரும பிரச்சினைகள் தோன்றாது.

ஆல்கஹால் இல்லாத டோனர்களை பயன்படுத்த வேண்டும். அவை அதிகப்படியான அழுக்கு, எண்ணெய் பசை போன்றவற்றை நீக்கும். ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் (ஏ.ஏ.ஏ), சாலிசிலிக் அமிலம், ஹையலூரோனிக் அமிலம் ஆகியவை உள்ளடங்கி இருக்கும் டோனர்களை பயன்படுத்துவது நல்லது. அவரவர் சரும வகைக்கு ஏற்ற சிறந்த டோனரை தேர்வு செய்வது அவசியம். இதற்கு சரும நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

சருமம் வறட்சி கொண்டதாக இருந்தாலோ, ஏதாவதொரு பகுதியில் உலர்வாக காணப்பட்டாலோ அதற்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுக்கவேண்டும். தினமும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சரும வறட்சியில் இருந்தும் காக்கும்.

தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. எல்லா சீதோஷ்ணநிலைக்கும் சன்ஸ்கிரீன் ஏற்றது என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வெளியே செலவிடும் நேரத்தை பொறுத்து 6 மணிநேரத்திற்கு ஒருமுறை அதனை பூசிக்கொள்ளவேண்டும்.
Tags:    

Similar News