லைஃப்ஸ்டைல்
எண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டினால் முடி கொட்டுமா?

எண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டினால் முடி கொட்டுமா?

Published On 2020-11-28 08:16 GMT   |   Update On 2020-11-28 08:16 GMT
தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை.
இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் கூந்தலுக்கு அக்கறை செலுத்த யாருக்கு நேரம் இருக்கிறது. அதுவும், பெரும்பாலானவர்களுக்கு தலையை சீவுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. தலைக்கு குளித்தோமா, ஹேர் ட்ரையர் யூஸ் பண்ணி முடியை காய வைத்தோமா அத்தோடு நமது வேலை முடிந்தது என்று பலர் இருக்கின்றனர்.

முந்தைய காலத்தை காட்டிலும் இன்றைய காலக்கட்டத்தில் நீளமான கூந்தல் உள்ள பெண்களை காண்பதே அரிதாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் சீரற்ற பராமரிப்பு முறை. 

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. வழிய வழிய எண்ணெய் தேய்த்து, சீவி கொண்டால் முடியே கொட்டாது என்று எண்ணுவது முட்டாள்தனம் என்றே கூற வேண்டும்.

கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்தால், எனக்கு முடி கொட்டுகிறது என்று பலர் புலம்புவதுண்டு. அதற்காக எண்ணெய் தேய்க்காமல் இருக்கக்கூடாது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதில் பல விஷயம் உண்டு. இதை முழுவதுமாக படித்தால் நீங்கள் இனி முடி உதிர்வு பற்றி கவலை கொள்ளவே தேவையில்லை.

அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பது தெரியுமா உங்களுக்கு? கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது என்பது மிகவும் நல்லது. அதுவே, அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் அதுவே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தேவைக்கு அதிகமான எண்ணெயை தலையில் தடவும் போது, ஸ்கால்ப்பில் உள்ள சரும துளைகள் மூடிக்கொள்ளும். 

அதனால், அந்த இடத்தில் முடி வளர்ச்சி என்பது தடைப்படக் கூடும். முக்கியமாக, வாரத்திற்கு 2 முறை தான் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். அதுவும், தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்தால் தான் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும்.

கூந்தலை வலுவாக்குவதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியம். அதுவே, நீண்ட நாட்களுக்கு தலையில் எண்ணெயை அப்படியே விட்டு விட்டால் அது கூந்தலை பாதிக்கக்கூடும். தலையின் சருமமானது இயற்கையாகவே, தலையில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காக ஒருவித எண்ணெய் பசையை உற்பத்தி செய்யக்கூடியது. 

ஆனால், நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயை அப்படியே விடுவதால் தலையில் அதிகப் படியான எண்ணெய் பசை சேரக்கூடும். அதனால், முகப்பரு மற்றும் தடிப்புகள் ஏற்படக்கூடும்.தலைக்கு குளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக எண்ணெய் தேய்க்கவும் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விட்டு காலை எழுந்தவுடன் குளித்து விடவும். 

இதற்கு மேல் எண்ணெய் பசை தலையில் இருக்குமேயானால், அவை கூந்தலுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தக் கூடும். இது போன்ற அதிகப் படியான எண்ணெய் பசை தலையில் சேருவதால் தான் முகத்தில் பரு போன்ற பிரச்சனை உருவாகிறது. எண்ணெய் தேய்ப்பதற்கான நேரத்தை நிர்ணயித்து கொண்டால், தேய்க்கும் அளவையும் நிர்ணயிப்பது தான் சிறந்தது. 

போதுமான அளவு எண்ணெய் தேய்த்தால் மட்டுமே கூந்தல் ஈரப்பதத்தை ஈர்த்துக் கொள்ளும். ஒருவேளை எண்ணெய் அதிகமாகி விட்டால் உடனே துடைத்து விடுங்கள். பெரும்பாலான பெண்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்த உடனேயே மசாஜ் செய்ய ஆரம்பித்து விடுவர். அப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும். 

முதலில் எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு கூந்தலை சிக்கலின்றி சீவிக் கொள்ளவும். பின்னர், எண்ணெய் தொட்டு மெதுவாக கைகளால் தேய்க்க வேண்டும்.  இப்படி செய்தால் முடி கொட்டுவது குறையும் அல்லது முடி கொட்டாது. தலையை சீவி பிறகு எண்ணெய் தேய்ப்பதால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராகி, வேர்கள் வலுபெற்று, கூந்தலையும் ஆரோக்கியமாக வளரச் செய்யும். 

பெரும்பாலானோர், எண்ணெயை கையில் ஊற்றி உள்ளங்கைகளில் தேய்த்து அப்படியே தலையில் தேய்ப்பதை வழங்கமாக கொண்டிருப்பர். இப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும். எப்போதும், எண்ணெயை ஒரு பவுளில் ஊற்றி அதை விரல்களால் தொட்டு, மெதுவாக ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் முடி கொட்டாமல் இருப்பதோடு, அனைத்து ஊட்டச் சத்துக்களும், கூந்தலுக்கு முழுவதுமாக கிடைக்கப்பெறும். 

மேலும். எண்ணெயால் கிடைக்கக்கூடிய ஈரப்பதமும் முழுமையாக கிடைத்திடும். அது மட்டுமல்லாது, இப்படி எண்ணெய் தேய்த்தால் பொடுகு தொல்லை எனும் பேச்சுக்கே இடமிருக்காது. இந்த பழக்கம் அனைத்து பெண்களுக்கு இருக்கும். எண்ணெய் தேய்த்து கூந்தலுக்கு மசாஜ் செய்தவுடன் முடியை தூக்கி கட்டிக் கொண்டு பிற வேலைகளை பார்க்க சென்று விடுவர். 

இது மிகவும் தவறான செயல். எண்ணெய் தேய்த்தவுடன் ஸ்கால்ப்பானது மிகவும் மிருதுவாக இருக்கும். அதுபோன்ற சமயத்தில் கூந்தலை இறுக்கமாக தூக்கி கட்டும் போது, கூந்தல் அதிகமாக உதிர தான் செய்யும். தேய்க்கும் எண்ணெய்வேர்களால் உறிஞ்சப்பட்டு, கூந்தலை மிருதுவாக்க வேண்டுமென்றால், எண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டாமல் ஃப்ரீயாக விட்டு விடுங்கள்.
Tags:    

Similar News