லைஃப்ஸ்டைல்
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சரும வறட்சி நீங்க

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சரும வறட்சி நீங்க

Published On 2020-05-20 09:32 GMT   |   Update On 2020-05-20 09:32 GMT
கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.
வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அதனால் அடிக்கடி உடம்பை கழுவவும்.

கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்கவேண்டும்.

கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.

தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.
Tags:    

Similar News